தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் இந்த படமும் கைவிடப்பட்டது. இப்படியான நிலையில் விக்ரமின் 63 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது 

Continues below advertisement

சியான் 63 அறிவிப்பு

மாவீரன் , 3BHK ஆகிய படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் விக்ரமின் 63 ஆவது படத்தை இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்கள் கழித்து ஒரு அறிமுக இயக்குநருக்கு விக்ரம் வாய்ப்பளித்துள்ளார். போடி ராஜ்குமார் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றியது இல்லை. அவர் 3 குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில் இரு குறும்படங்கள் விருது பெற்றுள்ளது. விக்ரமுக்கு அவர் சொன்ன கதை பிடித்துபோனதால் அவரை நம்பி இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது