ஆச்சார்யாவுக்கு குரல் கொடுத்த மகேஷ் பாபு... ட்விட்டரில் நன்றி தெரிவித்த சிரஞ்சீவி

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆச்சார்யா'. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Continues below advertisement

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆச்சார்யா'. இப்படத்தில் சிரஞ்சீவியுடன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Continues below advertisement

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். இத்திரைப்படதிற்காக மகேஷ் பாபு வாய்ஸ் ஓவர் கொடுப்பதாக தகவல் வெளியானது.

மேலும், மகேஷ் பாபுவின் வாய்ஸ் ஓவரில் தான் மொத்தப் படத்தின் கதையும் விரியும் என்று கூறப்பட்டது. இத சிரஞ்சீவி ரசிகர்களிடம் மட்டுமல்லாது, மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மகேஷ் பாபு, பவன் கல்யாணின் ஜல்சா படத்திற்கும் இதுபோல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் ஆச்சார்யாவுக்கு மகேஷ் பாபுவின் வாய்ஸ் ஓவர் என்பது படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருந்தது. இந்நிலையில், சிரஞ்சீவி அதிகாரபூர்வமாக தனது ட்விட்டரில் ஆச்சார்யா படத்திற்கு மகேஷ் பாபு வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதை உறுதி செய்துள்ளார். 

இது தொடர்பாக சிரஞ்சீவி பதிவிட்டுள்ள ட்வீட்டில், அன்புள்ள மகேஷ்பாபு உங்களின் அன்பான குரலால் ஆச்சார்யாவின் கதையை நீங்கள் சொல்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. ரசிகர்கள் உங்கள் குரலைக் கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை, சிரஞ்சீவி, மகேஷ்பாபு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய ஆச்சார்யா படம் கொரோனா அலைகளால் தள்ளிப்போய் இப்போது வெளியாகவுள்ளது.

மகேஷ் பாபுவுக்கு சிரஞ்சீவி மட்டுமல்ல ராம்சரண் தேஜாவும் நன்றியைத் தெரிவித்துள்ளார். 

புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் இன்னொரு ஹிட் சினிமாவுக்கு தயாராகிவிட்டதாக டோலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola