லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கம்ப்ளீட் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'லியோ'. தமிழ், தெலுங்கும் கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் சின்மயி தான் திரிஷாவுக்கு டப்பிங் பேசியுள்ளார். இதற்காக லோகேஷ் கனகராஜ் மட்டும் லலித் குமாருக்கு தன்னுடைய எக்ஸ் பக்கம் மூலம் நன்றி தெரிவித்து அவர்களின் தைரியத்தையும் பாராட்டினார். பாடகி சின்மயி பல ஆண்டுகளுக்கு பிறகு டப்பிங் பேசியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது உண்மை என்றாலும் லோகேஷ் கனகராஜுக்கும் தொல்லை ஏற்ப்பட்டது.
அதாவது டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சின்மயி டப்பிங் செய்தது டப்பிங் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுங்க பார்த்துக்கொள்ளலாம் என சின்மயிடம் கூறியதாகவும் அதனால்தான் சின்மயி டப்பிங் பேசியதாகவும், லோகேஷ் கனகராஜின் தைரியத்திற்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். இதனால் இது தொடர்பாக சின்மயி, லோகேஷ் கனகராஜ் மற்றும் டப்பிங் சங்கத்தினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில், டப்பிங் சங்கத் தலைவர் ராதாரவி, லோகேஷ் கனகராஜ்க்கு எதுவும் தெரியாது பாவம். சின்மயி சங்கத்தில் உறுப்பினரா அல்லது உறுப்பினர் இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவரிடம் பேசியதும் அபராதத்தை தான் செலுத்துவதாகக் கூறினார், அதேபோல் அபராத்தையும் கட்டியுள்ளார். சின்மயியை இனிமேல் டப்பிங் சங்க கட்டிடத்திற்குள் சேர்க்கவே மட்டோம் எனக் கூறினார்.
மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் டப்பிங் சங்க நிர்வாகி, “ சின்மயி டப்பிங் பேசுவதற்கு நான் துணைபோகவில்லை. ஒரு திருடன் எப்படி இரவில் வந்து திருடுவானோ அப்படி வந்து இரவில் வந்து டப்பிங் பேசியுள்ளார். இதனை சின்மயி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது.