தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவரான கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நயன்தாராவின் திருமண லுக்கை ரீ க்ரியேட் செய்து அசத்தியுள்ளார்.


காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள்


தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பலரது படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்த கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இவர் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.




அதனைத் தொடர்ந்து பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வரும் மானஸ்வியின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கொட்டாச்சி தன் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.


நயன் Vs குட்டி நயன்


அந்த வகையில் முன்னதாக தான் இணைந்து நடித்த கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் திருமண லுக்கை மானஸ்வி ரீ க்ரியேட் செய்துள்ள புகைப்படத்தை கொட்டாச்சி பதிவிட்டுள்ளார்.


 






அழகிய சிவப்பு நிற புடவையில் நயன்தாரா தன் திருமணத்தன்று தோன்றிய புகைப்படங்களை முன்னதாக நடிகர் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களை புயலாக ஆக்கிரமித்தது.


 






இந்நிலையில், தற்போது மானஸ்வி குட்டி நயன்தாராவாக அவரைப் போன்றே தோன்றியுள்ள இந்தப் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்று வைரலாகி உள்ளது.