நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் முதல்வர் விஜய் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜௌய் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நேற்று நடைபெற்ற 2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விஜய் - அஜித் சந்திப்பு
அதற்கு முன்பாக அஜித்தும் விஜயும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். அஜித்திற்கு முதல்வர் விஜய் வாழ்த்தும் தெரிவித்தார். இருவரின் சந்திப்பு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பேசுப்பொருளானது. இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டிங்கில் இடம்பெற்று பெரும் வைரலானது.
ரேஸ் முடிந்ததும் இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது, அஜித்தை போல, முதல்வர் விஜயும் ரேஸிங் டிரஸ்ஸில் தோன்றினார். இருவரும் தேசியக்கொடியை பிடித்தவாறு வெளியான புகைப்படமும் வெளியாகி அதுவும் வரைலானது.
கேமியோ ரோலில் விஜய்
இந்தப் புகைப்படம் மூலம் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காகதான் முதல்வர் விஜய் இந்த ரேஸிங் டிரஸ்ஸில் தோன்றியுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்தப் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இருவரும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், இருபெரும் ஜாம்பவான்களுடன் பணி செய்தது என் பாக்கியம் என்று கூறியுள்ளார். முக்கியமாக #கிளாடியேட்டர்ஸ் ஹேஷ்டேக்குடன் பதிவிட்டதுதான் இருவரும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக நடித்துள்ளதாக தெரிகிறது. இது உண்மையானால் இருவரின் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருக்கும். விஜய் - அஜித் தனது தொடக்க சினிமா காலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
