'எதிலும் தனிப்பாணி அதுதான் பார்த்திபன்’ என இரவின் நிழல் படம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்து ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்திபனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின்,
'’எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்.ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!நான்லீனியர் சிங்கிள் ஷாட்படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இரவின் நிழல் படம் பார்த்து மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இரவின் நிழல் படம் ஒரு அசாத்திய முயற்சி என்றும் உலக சாதனை என்றும் வாழ்தியுள்ளார். படத்தைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பிய ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் அழைத்தும் பாராட்டினார்.
மேலும் கடிதத்தில் “இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்... அவரது அனைத்து படக்குழுவினருக்கும்... மதிப்பிற்குரிய ஆர்.ரகுமான் அவர்களுக்கும்... முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்... எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்