சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 5 ஆம் நாளான இன்று என்னென்ன திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறித்து காணலாம். 

சென்னை சர்வதேச திரைப்பட விழா

கோவா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் திரைப்பட விழா ரசிகர்களிடையே புகழ் பெற்றது.  இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த  தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். 

திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் 

ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

எங்கு காணலாம்? 

சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது. 

படங்கள் திரையிடப்படும் நேரங்கள்

ஒவ்வொரு தியேட்டரிலும் காலை 10, 10.15, 12.15, 12.30, 12.45, 1 மணி ஆகிய நேரங்களிலும், இதேபோல் 2.30, 3, 3.30, 4.30, 4.45, 5, 6.30, 7, 7.15 ஆகிய நேரங்களிலும் படங்கள் திரையிடப்படுவதால் சரியான நேரங்களை கண்டறிந்து உங்கள் பேவரைட் படங்களை கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது? 

Screen காலை நண்பகல் மதியம் மாலை இரவு 
Santham (sathyam cinemas)

Lucky chan -sil  

(world cinema) 

Mi Iubita Mon Amour

(world cinema) 

Broker 

(world cinema) 

Leila's Brothers

(world cinema) 

 
Serene (sathyam cinemas)

Bhotbhoti

(Indian Panorama) 

Hadinelantu

(Indian Panorama)

TaYa

(Indian Panorama)

Between Us 

(world cinema) 

 
Seasons (sathyam cinemas)

Tenzin

(world cinema) 

MGR Film institution students competition films

Maamanithan

(tamil feature film competition)

O2

(tamil feature film competition)

 
6 Degree (sathyam cinemas)
 
Melchior the Apothecary

(world cinema) 

Master classes 

(Conversation Session)

Sick of Myself

(Classic) 

The Night of the 12th

(world cinema) 

Diary of a fleeting affair

(world cinema) 

Anna theatre

Burning Days 

(world cinema) 

Metronom

(world cinema) 

Loving Memories

(world cinema) 

Parsley

(world cinema) 

 

மேலும் விபரங்களுக்கு 

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இந்த திரைப்பட விழாவை காண மாணவர்கள், திரைப்பட துறையினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பொதுமக்களுக்கு ரூ.1000 டிக்கெட் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.