துபாயில் வைப்ரேட்டர் போன்ற செக்ஸ் டாய்ஸ்கள் தடைசெய்யப்பட்ட பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே துபாய்க்கு விமானத்தில் பயணம் செய்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது கைப்பையில் வைப்ரேட்டர் வைத்திருந்ததால் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார். பின்னர் அந்த டாய்ஸை பேப்பரில் சுற்றி தூர எறிந்த பிறகே அவருக்கு துபாயில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது,






இன்ஸ்டாகிராமில் தனது பிட்னஸ் ஆப்பான ப்ளிட்ஸ் அண்ட் பர்ன் மூலம் பிரபலமானவர் சார்லட் க்ராஸ்பி. தனித்துவமான உடற்பயிற்சி மற்றும் உணவு திட்டத்தை தனது ஆப் பயனாளர்களுக்காக இவர் உருவாக்கியுள்ளார். அண்மையில் இவர் துபாய் சென்றபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


‘கஸ்டம்ஸ் அதிகாரிகள் எனது பையைக் காட்டினார்கள்.நான் எதுவுமே இல்லை என மறுத்தேன்.பிறகுதான் அவர்கள் அதில் இருக்கும் செக்ஸ் டாயைக் காண்பித்ததும் ‘ஐயோ கடவுளே’ என நினைத்துக்கொண்டேன். பிறகு எனது ஹோட்டல் வந்து அந்த டாய்ஸை பேப்பரில் சுற்றி தூர எறிந்தேன். கடைசி நிமிடத்தில் பேக் செய்து கிளம்பியதால் அதனை கவனிக்கத் தவறிவிட்டேன்’ என சார்லட் குறிப்பிட்டுள்ளார்.