ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், மனோ பாலா ஆகியோர் இடம்பெற்றுள்ள கலகலப்பான  சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். 


2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.


பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.  மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் ஷெட்யூலும் முடிந்துவிட்டதாக ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.


இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முன்னதாகக் தொடங்கி நடைபெற்று வருகிறது.






இந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, மனோபாலா ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில், முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.


சந்திரமுகி பாகம் ஒன்றில் ரஜினிகாந்த் - வடிவேலு காமெடி படத்தில் மிகச்சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருந்த நிலையில், இந்த பாகத்திலும் வடிவேலு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






திருமணத்துக்குப் பிறகு இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ள நிலையில், இந்தியன் 2 படத்திலும் காஜல் தற்போது நடித்து வருகிறார்.


முன்னதாக இந்தி சந்திரமுகியான பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூலில் சாதனை படைத்த நிலையில், தமிழிலும் சந்திரமுகி 2 ரசிகர்களை உற்சாகப்படுத்தி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.