National Awards: மத்திய அரசு வெளியிட்டுள்ள 72வது தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Continues below advertisement

தேசிய விருதுகள் அறிவிப்பு:

மத்திய அரசின் 72வது தேசிய விருதுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2024ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தேர்வான சில படங்கள் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், சில திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை பார்த்தால், இதில் அப்படி என்ன இருக்குன்னு விருது கொடுக்கிறார்கள்? சினிமா உலகிற்கு இந்தியாவில் கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் தேசிய விருதுகள், உள்நோக்கத்துடனும் அரசியல் லாபத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றனவோ என பலரும் சந்தேகங்களையும், கேள்விகளையும் தீவிரமாக எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ரசிகர்களிடையே கூட சுமாரான வரவேற்பையே பெற்ற தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்திற்கு எதன் அடிப்படையில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது? என பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தேசிய விருதுகள் மீது குவியும் விமர்சனங்கள்: