இந்தியாவில் பல ஆங்கில சீரிஸ்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில், அனைவரையும் கவர்ந்தது அமெரிக்க டிவி தொடரான ’Friends'.  இந்த தொடர் 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பானது. தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மொத்த 10 சீசன்கள், 236 எபிசோட்களை கொண்ட இந்த தொடரில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம்.


அதாவது, நியூ யார்க்கில் இருக்கும் ஆறு நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி தொடர் வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.


சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி: 






ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி. இவர் இந்த தொடரில் 'Chandler Bing’ என்ற கதாபாத்திரத்தில், தனது தனித்துவமான காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார். குறிப்பாக, பிரண்ட்ஸ் தொடரில் ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்துடன் சாண்ட்லர் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்துவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இவருக்கு வயது 54. மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்


மேத்யு பெர்ரியின் மறைவைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் , இந்தி, தமிழ் என அனைத்து மொழி திரைப்பிரபலங்களும் தங்களது சமூக வலைதளத்தில் இந்த வருத்தத்திற்குரிய நிகழ்விற்காக தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். 


 சமந்தா


  நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேத்யுவின் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். ”இந்த உலகம் உங்களை சதா நேசித்துக் கொண்டே இருக்கும் “ என்று அவர் பதிவிட்டுள்ளார்.


 மலையாள நடிகர்ள் இரங்கல்


மலையாள நடிகர்களான டொவினோ தாமஸ், ஆண்டனி வர்கீஸ், அப்ர்னா பாலமுரளி, உள்ளிட்டவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.  நாங்கள் உங்களை நேசிக்கிறோம் 


மகேஷ் பாபு


தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” ஒரு நல்ல நண்பனை ஒரு தலைமுறை இழந்திருக்கிறது. நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் மேத்யு. ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.