கடந்த அக்டோபர் 29 அன்று, தென்னிந்திய திரையுலகின் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியான செய்தியாக கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி அனைவரின் மீதும் இடியாக விழுந்தது. 46 வயதான புனீத் ராஜ்குமார் இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கடுமையான மார்படைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகு, நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் தவிர்க்க முடியாததாகப் போனது.


கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிற்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் புனீத் குமார் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாகக் கூடி வருகின்றனர். தமிழ் சினிமா முதல் கன்னட சினிமா வரை, பல்வேறு திரைக் கலைஞர்களும் நடிகர் புனீத் ராஜ்குமாருடனான நினைவுகளை மீண்டும் பேசியும், அவருக்கு மனமார்ந்த அஞ்சலிகளைச் செலுத்தியும் வருகின்றனர். 


புனீத் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தென்னிந்திய திரைப் பிரபலங்கள் சிலரின் ட்விட்டர் பதிவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.