ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டு திருமண கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனம் பெரும் அளவில் படு விமர்சையாக பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த விழாவில் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைத்துறை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் மற்றும் பேரக்குழந்தையுடன் கலந்து கொண்டார். பாரம்பரிய உடையில் மிகவும் கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ரெட் கார்பெட்டில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, நடிகர் ராம்சரண் மற்றும் உபாசனா, மகேஷ் பாபு, மனைவியுடன் ஏ.ஆர். ரஹ்மான், ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர் அட்லீ மற்றும் அவரின் மனைவி பிரியா, டோலிவுட் நடிகர் வெங்கடேஷ், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், அர்ஜுன் கபூர், ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, குஷி கபூர், ஷனயா கபூர், சஞ்சய் தத், ஷாருக்கான் மகள் சுஹானா மற்றும் மகன் ஆர்யன் கான், சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலிகான், அனில் கபூர், குஷி கபூர், கரண் ஜோஹர், வருண் தவான், திஷா பதானி, மாதுரி தீட்சித் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளன. ஜூலை 12ம் தேதி சுப விவா, ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாள் மற்றும் ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்னும் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள்.