திரையிசையில் நுழைந்து ஏ.ஆர் ரஹ்மான் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ரசிகர்கள் அதனைக் கொண்டாடும் வகையில் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது பிரபல தனியார் திரையரங்க நிறுவனமான பி.வி.ஆர். சினிமாஸ்.


இசைப்புயலின் பயணம்


“எனது வாழ்நாள் முழுவதும் என் முன்னே அன்பு, வெறுப்பு என இரண்டு விருப்பங்கள் இருந்தன, நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால் இங்கு நிற்கிறேன்”


2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், ரஹ்மான் ஆஸ்கர் வெல்ல வேண்டும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களின் ஏக்கம் நிறைவேறிய சில நிமிடங்களுக்குப் பின், விருது பெற்ற கையுடன், தன் வெற்றிக்கான தத்துவத்தையும் இவ்வாறு எளிய மொழியால் விவரித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 


1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.  தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் , என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்


ரஹ்மான் திரைப்பட விழா


இதனை முன்னிட்டு பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 4 ஆகஸ்ட் முதல் 9 ஆகஸ்ட் வரை ரஹ்மானின் 15 படங்களை திரையிட இருக்கிறது பி.வி.ஆர் நிறுவனம். இதற்கான முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


மகிழ்ச்சி தெரிவித்த ரஹ்மான்






இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரஹ்மான் உங்களின் அன்பும் ஆதரவையும் பெற்றதற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.