செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் வேல்ஸ் சென்னை கிங்ஸ் வீரர் விக்ராந்த் சதம் அடித்து விஜய்யின் மெர்சல் பட கொண்டாத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வருடம் CCL தொடரில் சென்னை அணி தடுமாற்றத்துடன் தான் துவங்கியது. முதல் போட்டியில் பெங்கால் அணியிடம் சூப்பர் ஓவரிலும், இரண்டாவது போட்டியில் டக்வொர்த் முறையில் கேரளா அணியிடம் தோற்றது.
விக்ராந்தின் அதிரடி ஆட்டம்
நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில், வெற்றிப்பெற வேண்டும் என்கிற சென்னை கிங்ஸ் அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார் அணியின் கேப்டன் விக்ராந்த். தனது இயல்பான அதிரடி பாணியில் விளையாடிய அவர், வெறும் 42 பந்துகளில் சதம் கடந்து சதம் அடித்தார். அவரது இந்த இன்னிங்ஸில்14 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடங்கும். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 225 ரன்கள் குவித்தது.
வைரலான 'மெர்சல்' மேனரிசம்
தனது சதத்தை எட்டிய அந்தத் தருணத்தில், விக்ராந்த் தனது மட்டையை உயர்த்திப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'மெர்சல்' படத்தில் வரும் அந்த புகழ்பெற்ற ஸ்டைலை (இரு கைகளையும் விரித்து நிற்கும் மேனரிசம்) செய்து காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் வைரல்
விக்ராந்தின் இந்த வீடியோ தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள், விக்ராந்தின் இந்த 'தளபதி பாசத்தை' பகிர்ந்து, "ரியல் சிசிஎல் கிங்" என பாராட்டி வருகின்றனர். விக்ராந்த் ஏற்கனவே விஜய்யின் உறவினர் மற்றும் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது..
சென்னை வெற்றி:
226 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மும்பை ஹீரோஸ் அணி, ஆரம்பத்திலேயே 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சாகிப் சலீம் ஓரளவிற்கு போராடினாலும், அந்த அணியால் 19.4 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
