தமிழ் படங்களைப் பார்த்து தான் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல கன்னட நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மைத்ரேயி ராமகிருஷ்ணனின் எண்ட்ரீ
இலங்கை தமிழர்களாக இருந்து அகதிகளாக கனடாவில் குடியேறிய பெற்றோருக்கு பிறந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன், ஒன்டாரியோவில் உள்ள மிசிசாகாவில் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். இவர் அமெரிக்க காமெடி டிராமாவான Never Have I Ever என்ற வெப் சீரிஸில் தேவி விஸ்வகுமார் என்ற பெயரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 2020 ஆம் ஆண்டில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் 2023 வரை நான்கு சீசன்களாக வெளியானது.
இதில் நடிப்பதற்காக 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் எழுத்தாளர் மிண்டி காலிங் மைத்ரேயியை தேர்வு செய்தார். இந்த படத்தில் தமிழ் தெரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடத்தில் நல்ல கவனம் பெற்றது. இவர் இந்த வெப் சீரிஸில் தொடர்ந்து மை லிட்டில் போனி: டெல் யுவர் டேல், மை லிட்டில் போனி: மேக் யுவர் மார்க் , My Little Pony: Winter Wishday, My Little Pony: Birdlewoodstoock உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு டர்னிங் ரெட் என்ற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் The Netherfield Girls என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் படங்கள் தான் இன்ஸ்பிரேஷன்
இதனிடையே நேர்காணல் ஒன்றில் மைத்ரேயி ராமகிருஷ்ணனிடம் தொகுப்பாளர், ‘நீங்கள் இளம் வயது உடையவர். தமிழ் கலாச்சாரத்தை ஊடகத்தில் பார்த்துள்ளீர்களா?..அதனை நீங்கள் பார்த்தபோது உங்கள் ரியாக்ஷன் என்ன?. உங்களிடம் அந்த கேரக்டர் வெளிப்பட்டதா?’ என கேள்விகளை எழுப்பினார். அதற்கு, “நான் நல்ல தமிழ் படங்களை விரும்புவேன். அதனை பார்த்து தான் நானும் என் சகோதரும் வளர்ந்தோம். குறிப்பாக போக்கிரி மற்றும் சந்திரமுகி படங்களை சொல்லலாம்” என மைத்ரேயி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.