சூர்யா நடிப்பில் , பாண்டிராஜன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சூர்யாவின்  ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு வெளியான திரைப்படம் என்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பும்  அதிகமாகவே இருந்தது எனலாம். எதற்கும் துணிந்தவன் திரைப்பட்ம பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் குறித்த பிகைண்ட் தி கேமரா தகவல்கள் தற்போது கசிய தொடங்கியிருக்கிறது.  முதலில் படம் குறித்த புரமோஷன் நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் பாண்டிராஜன் , நான் சூர்யாவிற்காக எழுதிய கதை இதுவல்ல என்றும் , தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தான் கதையை மாற்றினார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் படத்தில் சூர்யாவின் கெட்டப்பில் அவருக்கு உடன்பாடு இல்லை என கூறியிருக்கிறார்.






அதாவது எதற்கும்  துணிந்தவன் படத்தில் இடம்பெற்ற  ‘உள்ளம் உருகுதய்யா ‘ என்னும் பாடலில் சூர்யா , முருக கடவுள் போன்ற கெட்டப்பில் வருவார். இந்த பாடல் சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தாங்கள் வணங்கும் முருக கடவுளை இழிவுப்படுத்துவதாக இருக்கிறது, பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் பாடல் உருவாகும் பொழுதே முருகனாக  வேடம் போட சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை எனவும் , இயக்குநர் பாண்டிராஜன் கதைக்கு முருகன் வேடத்தில் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டதால்தான் அந்த பாடலில் அவர் நடித்தார் என்றும் ஒளிப்பதிவாளர் ரத்தின வேலு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் வேறு நடிகராக இருந்தால் இந்த கெட்டப்பில் நடித்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.