Breaking News LIVE 14th Nov 2024: ஓம்கார் பாலாஜியை நவம்பர் 28 வரை சிறையிலடைக்க உத்தரவு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 14 Nov 2024 06:35 PM
Breaking News LIVE: ஓம்கார் பாலாஜியை நவம்பர் 28 வரை சிறையிலடைக்க உத்தரவு 

 


பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் ஓம்கார் பாலாஜியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு 28ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கைதான இந்து மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோவை அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு பின் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜியை போலீசார் ஆஜர்படுத்தினர். 

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 60 கி.மீ முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்த தென்னக ரயில்வே அதிகாரிகள்.

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 60 கி.மீ முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்த தென்னக ரயில்வே அதிகாரிகள்.


செங்குத்துத் தூக்குப் பாலத்தை தூக்கியும், இறக்கியும் ஆய்வு செய்தனர்.

தாராவி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

மும்பையில் தமிழர்கள் அதிகளவில் வாழும் தாராவி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார் விசிக தலைவர் திருமாவளவன்.

"நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது" : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம்

"நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டுபோல் உள்ளது" : தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டம்.

ஆம்பூரில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

ஆம்பூரில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழப்பு. உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு - பெண் நீதிபதிகள் நியமனம்

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு - பெண் நீதிபதிகள் நியமனம்


கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண் நீதிபதிகள் சுமதி சாய் பிரியா, பி.டி ஜெனிஃபர் ஆகிய இருவரை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்


இந்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி சிவராமன் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது

அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதி.


தோள்பட்டையில் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி என மதிமுக எம்.பி. துரை வைகோ விளக்கம்

20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, ஜானகிபுரம், அரசூர், காணை, கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 20 நிமிடங்களுக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவர்கள்

சென்னை அரசு மருத்துவமனையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

21 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background


  • திருநெல்வேலியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் பெரும் அவதி

  • திருநெல்வேலியில் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

  • தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னையில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தகவல்

  • சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் – 27ம் தேதி வரை நீதிமன்ற காவல்

  • அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து; அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

  • அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கினாலும் இன்று தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

  • அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தனியார் மருத்துவர்களின் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது

  • கத்திக்குத்துக்கு ஆளான அரசு மருத்துவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

  • மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர் பாதுகாப்பை உறுதி செய்க – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

  • கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காமல் தரக்குறைவாக பேசியதாக விக்னேஷின் தாயார் குற்றச்சாட்டு

  • பொய் பிரமாணப் பத்திரம் தாக்கல் விவகாரம்; முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு

  • புதுச்சேரியில் சட்டக்கல்லூரி தேர்வு முடிவுகளில் குளறுபடி – மாணவர்கள் அதிர்ச்சி

  • குடும்ப அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள மகளிர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை – திடீர் பல்டி அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

  • புதிய அதிபர் தேர்வாகியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் – நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

  • இலங்கை அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சி இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்

  • டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம் என வட மாநிலங்களில் புகைமூட்டம் – மக்கள் பாதிப்பு

  • தென்காசியில் மேள தாளத்துடன் சாலையில் பிறந்தநாள் கொண்டாடியவர் கைது

  • தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைப் பதிவு; கஸ்தூரியின் முன் ஜாமின் மனு இன்று தீர்ப்பு

  • உச்சத்திற்கு சென்ற வெங்காயம் விலை விரைவில் குறையும் –

  • திலக் வர்மா சத உதவியுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.