பிரம்மாஸ்திரா படம் குறித்தான வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.
அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு அன்று வெளியிடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற வில்லை. விஎஃப்எக்ஸ் காட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், படத்தின் கதை மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, படமானது முதல்நாளில் படமானது 75 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வார முடிவில் 225 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் வார முடிவில் படமானது 300 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் பிரம்மஸ்திரா திரைப்படம் 10 நாட்கள் 360 கோடி வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்தப்படத்தின் பிரோமோஷன் பல்வேறு மொழிகளில் நடந்த நிலையில், அதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.