கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து பிரபலங்கள் விவாகரத்து அறிவித்து வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு சமீபத்தில் முடிவுக்க வந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். அந்த வகையில் ஹாலிவுட் நடிகர்கள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் நடிகர் பிராட் பிட் இன் விவாகரத்து வழக்கு ரொம்ப சுவாரஸ்யமானது
ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட்
உலகம் முழுவதும் தனது அழகிற்காக வியந்துபார்க்கப்பட்டவர் ஏஞ்சலினா ஜோலி. இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ஒரு பியூட்டி ஐகானாக உள்ளாரோ அதேபோல் ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலி. அவருக்கு சற்றும் சளைக்காமல் பெண்களால் விரும்பப்படுபவர் நடிகர் பிராட் பிட். ஒரு பக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் மறுபக்கம் தனித்துவமான படங்களில் நடித்து வருபவர் பிராட் பிட்.
கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். சினிமா தவிர்த்து நடிகை ஏஞ்சலினா ஜோலி போரில் அகதிகளான குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிராட் பிட் மற்றும் எஞ்சலின் ஜோலி இருவரும் சேர்ந்து மூன்று குழந்தைகளை தத்தெடுத்தார்கள். இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆறு குழந்தைகளுக்கு பெற்றோர்களான ஏஞ்சலினா மற்றும் பிராட் திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்தார்கள். விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
8 ஆண்டுகளாக நீளும் விவாகரத்து வழக்கு
ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் இருவருக்குமான விவாகரத்து கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணம் இருவரும் சேர்ந்து தங்கள் ஆறு குழந்தைகளின் பொருளாதார செலவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இருவருக்கும் சொந்தமாக ஃபிரான்சில் சொந்த வைன் ஃபாக்டரி சொந்தமாக உள்ளது. ஆறு குழந்தைகளின் பொறுப்புகள் மற்றும் இந்த ஃபாக்டரியை பங்கிட்டுக் கொள்வது குறித்தான பேச்சுவார்த்தை கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இருதரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தாலொழிய இந்த விவாகரத்திற்கு தீர்ப்பு வழங்க முடியாது.
போரில் அகதிகளான குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதே இருவரின் லட்சியமாக இருந்தது. பிரிந்து இருக்க முடிவு செய்தும் தங்கள் லட்சியத்தை காப்பாற்ற கடந்த எட்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்