லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் ’அத்ரேங்கி ரே’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்கள் கூறிவருகின்றனர். மேலும், #Boycott_Atrangi_Re என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ராஞ்சனா படத்திற்கு பிறகு மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘அத்ரங்கி ரே’. இந்தப்படத்தில் தனுஷுடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமையத்துள்ளார்.
இந்தப்படம் கடந்த 24ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது. தமிழில் ‘கலாட்ட கல்யாணம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. படம் எதிர்ப்பார்ப்பை மீறி அமோக வரவேற்பு பெற்றது. அத்துடன் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் இந்த படைத்தது.
இந்த நிலையில், படத்திற்கு இந்துக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் லவ் ஜிஹாத்தை ஊக்குவிப்பதாகவும், இந்து தெய்வங்களை கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து, படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். டுவிட்டரில், #Boycott_Atrangi_Re என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியதை தொடர்ந்து, டிரெண்டிங்கில் அது இடம்பிடித்துள்ளது. மேலும், இந்துக்கள் இதுபோன்ற திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சிலர் பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால், பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில், சாதியை ஒழிக்கவும் சமத்துவத்தை உருவாக்கவும் மக்களை ஒன்றிணைப்பதே மதங்களின் அடிப்படையே தவிர, அதை அரசியலாக்கி சுயலாபம் அடைய முயலும் அரக்கத்தனமான அரசியலில் மங்கக்கூடாது. கலப்பு திருமணங்களை எப்போதும் ஆதரிப்போம் என சிலர் ஆதரவு குரலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்