விஜய் தவெக கட்சி தொடங்கியது முதல் அவரை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருபவர் இயக்குநர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட். ஆனால் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் விஜயை போஸ் வெங்கட் பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது . ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சையில் விஜய் தனது ரசிகர்களை கையாண்ட விதம் குறித்து போஸ் வெங்கட் இந்த நேர்காணலில் பேசியுள்ளார்.
விஜயின் ஜனநாயகன திரைப்படம் சென்சார் சர்ச்சையில் சிக்கி படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதிசெய்யப்படாமல் இருந்து வருகிறது. படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவை ரத்து தலைமை நீதிபதிகளின் அமர்வு வழக்கை மறுவிசாரணை செய்ய தனி நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளது. தனது படம் வெளியாகாதது குறித்து விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் பொறுமையாக இருந்து வருகிறார். ஆனால் விஜய் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பராசக்தி திரைப்படத்தையும் சிவகார்த்திகேயனையும் கடுமையாக தாக்கி வந்தார்கள். இதுகுறித்து பேட்டி ஒன்றில் போஸ் வெங்கட் பேசினார்
விஜயை புகழ்ந்த போஸ் வெங்கட்
நான் விஜய்யையோ அல்லது தவெகவையோ ஒருபோதும் பாராட்டியதில்லை, ஆனால் இதற்காக நான் அவரைப் பாராட்ட வேண்டும். அவர் தனது ரசிகர்களை ஜனநாயகன் சென்சார் பிரச்சினைக்கு ஒருபோதும் பயன்படுத்தவில்லை, மத்திய அரசுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டம் நடத்தும்படி தனது ரசிகர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை, மாறாக குழப்பத்தை உருவாக்கும் நோக்கத்தில் இருந்தவர்களை அவர் கட்டுப்படுத்தினார்.
சமீபத்தில் பராசக்தி படத்திற்காக தியேட்டருக்குச் சென்றேன், 70-80 பேர் கொண்ட கூட்டம் தவெக துண்டுடன் தியேட்டருக்குள் இருப்பதைக் கண்டேன், படத்தின் முதல் 15 நிமிடங்கள் தியேட்டருக்குள் "தவெக -தவெக" என்று கோஷமிடத் தொடங்கினர். அவருக்கு அசாத்தியமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, எந்த நடிகருக்கும் இவ்வளவு தீவிர ரசிகர்களை நான் பார்த்ததில்லை." என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்.
கட்சி மாற திட்டமா ?
ஆளும் கட்சி அனுதாபியான போஸ் வெங்கட் எப்போதும் விஜயை விமர்சித்தே பேசி வந்திருக்கிறார். தற்போது திடீரென்று தேர்தல் நேரத்தில் விஜயை போஸ் வெங்கட் பாராட்டியுள்ளது கட்சி மாறும் எண்ணத்திலா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.