சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் வாய்ப்பு கேட்டு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஒரு சாட்சியாக இதைப் போல் நிறைய வீடியோக்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சுனோஷ் மிஷ்ராவை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது
மோனாலிஸா போன்ஸ்லே
நடந்து முடிந்த மகா கும்ப் யாத்திரையின்போது போது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. மகா கும்ப்வில் கடை வைத்திருந்த மோனலிஸா என்கிற 16 பெண் ஒருவரின் அழகு பலரை கவர்ந்தது. அங்கிருந்த பத்திரிகையாளரின் கவனம் உடனே மோனாலிஸா பக்கம் திரும்பியது. வசீகரமான கண்கள் , சிரிப்பு என பாலிவுட் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும்படி அவரது அழகு இருப்பதாக பலர் தெரிவித்தார்கள்.
வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய பாலிவுட் இயக்குநர்
சோசியல் மீடியா வழி பட்டி தொட்டி எல்லாம் இந்த பெண்ணை பற்றியே பேச்சு இருக்க பிரபல பாலிவுட் இயக்குநர் சுனோஜ் மிஷ்ரா அவரை தன் படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்தார். 'The Diary Of Manipur' என இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளதாகவும் இப்படத்தில் மோனலிஸா ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் சுனோஜ் மிஷ்ரா தெரிவித்தார்.
இப்படியான நிலையில் வாய்ப்பு தருவதாக சொல்ல பெண் ஒருவரை சுனோஜ் மிஷ்ரா பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லி போலீஸ் அவரை கைது செய்துள்ளது.