தீராத விளையாட்டு பிள்ளை, அரிமா நம்பி படங்களில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பாலிவுட்டில் ஆஷிக் பனாயா என்ற படத்தில் நடித்ததன் பிரபலம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு காலா படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அளித்த மீ டு புகார் பல சர்ச்சைகளையும் சந்தித்தன. 

நானா படேகர் மீது பாலியல் புகார்

கடந்த 208ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற படத்தில் நடித்த போது படப்பிடிப்பில் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையும் நடைபெற்றது. போலீசார் நடத்திய விசாரணையில், தனுஸ்ரீ தத்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டது. பின்னர் பாலியல் புகார் வழக்கில் இருந்து நானா படேகர் விடுவிக்கப்பட்டார். 

கண்ணீர் மல்க வீடியோ

இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் விட்டு அழுகும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், சொந்த வீட்டிலேயே என்னை கொடுமைப்படுத்துகின்றனர். மீ  டூ புகார் அளித்ததில் இருந்தே என்னை துன்புறுத்துகிறார்கள். ப்ளீஸ் தயவு செய்து யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். மன அழுத்தம் காரணமாக எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.