Swara Bhasker Marriage : நடிகை ஸ்வரா பாஸ்கரும், அரசியல் கட்சி தலைவருமான ஃபகத் ஜிரார் அகமத் திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவிப்பு வெளியானது. சமாஜ்வாதி கட்சி தலைவர் ஃபகத் ஜிரார் அகமத் மற்றும் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இருவரும் சில காலம் டேட்டிங் செய்த பிறகு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஜனவரி 6, 2023 அன்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இருவரும்  ஒரு மாதத்திற்கும் மேலாக செய்திகளை மூடிமறைத்து வந்தனர். இறுதியாக இருவரும் தங்களது காதல் வாழ்க்கை எப்படி திருமணத்தில் முடிந்தது என்பது குறித்து ஒரு வீடியோவாக வெளியிட்டனர். 


இந்நிலையில் ஸ்வரா பாஸ்கரின் கணவர் ஃபகத் பற்றி தெரியுமா?



  • ஃபகத் அகமது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி நிர்வாகி

  • தற்போது, ​​மகாராஷ்டிராவின் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவான சமாஜ்வாதி யுவஜன் சபாவின் மாநிலத் தலைவராக ஃபகத் இருக்கிறார்.

  • கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பகத், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

  • மும்பை சேர்ந்த பகத் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டமும்,  டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் சமூகப் பணியில் எம்.பில் முடித்தார்.

  • டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் TISS மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • இருவர்களின் பிறந்த தேதியின்படி ஸ்வரா பாஸ்கரை விட பகத் 4 வயது சிறியவர்.

  • நாடு முழுவதும் நடந்த CAA எதிர்ப்பு போராட்டங்களில் பகத் ஒரு முக்கிய முகமாக அறியப்பட்டார்.

  • SC/ST மாணவர்களுக்கான நிதியுதவியை திரும்பப்பெறும் முடிவை எதிர்த்து 100 நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பகத் TISS ஆல் PhD பதிவு செய்ய மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஸ்வரா பாஸ்கர்:


கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாத்துறையில் பணியாற்றி வரும் டெல்லியை சேர்ந்த 34 வயதான ஸ்வரா பாஸ்கர் பல்வேறு சமூக சீர்திருத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனு வெட்ஸ் மனு வெட் படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. மூன்று முறை ஃபிலிம் ஃபேர் விருதுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பேசுபொருளாக மாறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதோடு, பல்வேறு போராட்டக்களங்களிலும் நேரடியாக பங்கேற்று தனது ஆதரவை ஸ்வரா பாஸ்கர் வெளிப்படுத்தி வருகிறார்.






ஃபகத் ஜிரார் அகமத்:


 உத்தரபிரதேசத்தை சேர்ந்த 31 வயதான ஃபகத் ஜிரார் அகமத் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணி பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், ஆளும் பாஜக, மதவாத சக்திகளுக்கு எதிராகவும்,  சமூக நீதிக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களில் களமிறங்கி போராடியுள்ளார். 


2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பகத்துடன் சேர்ந்து ஒன்றாக போரட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.