தாய்ப்பால் கொடுக்கும் படங்களுக்காக ட்ரோல் செய்யப்பட்டதற்கு எவெலின் ஷர்மா ‘ஏன் வெட்கப்பட வேண்டும்?’ என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை எவெலின் ஷர்மா, தனது இரண்டு மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதன் பிறகு, எவெலின் ஷர்மாவை சிலர் விமர்சித்தனர். தற்போது அதற்கு அவர் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு நேர்காணலில், புதிய தாய்மார்கள் ‘தனியாக இல்லை' என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேட்டியில், “அத்தகைய படங்கள் ஒரே நேரத்தில் பாதிப்பையும் வலிமையையும் காட்டுகின்றன. நான் அதை அழகாக காண்கிறேன். தாய்ப்பால் மிகவும் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். உண்மையில் பெண்களுக்கு முதலில் மார்பகங்கள் இருப்பது இதற்குதான். அதனால் ஏன் வெட்கப்பட வேண்டும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “மக்கள் நினைப்பதை விட தாய்ப்பால் மிகவும் கடினமானது. நீங்கள் ஒரு புதிய அம்மாவாகத் தொடங்கும் போது, அது பெரும்பாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும். அம்மாக்கள் இதில் தனியாக இல்லை என்பதைத் தெரிவிக்கவே என் கதையைப் பகிர்ந்து கொண்டேன்” என்றும் கூறினார்.
ஈவ்லின் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் அவர் சமூகவலைதளங்களில் தாய்ப்பால் கொடுக்கும் படத்தைப் பகிர்வது இது முதல் முறை அல்ல.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்