அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் அலிபாக் வில்லாவின் முதல் படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளன. அந்த வில்லாவின் உட்புறங்களை (interiors designing) சுசானே கான் வடிவமைத்துள்ளார். அதே நேரத்தில் கட்டிடக்கலை நிறுவனமான SAOTA வெளிப்புறத்தை (exterior design) வடிவமைத்தனர்.


வீக்கெண்ட் ஹோமாக  (weekend home) வடிவமைக்கப்பட்ட இந்த வில்லா அனுஷ்காவும் விராட்டும் 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின் போது பல மாதங்கள் தங்கியிருந்த பிறகு அந்த வீட்டுடன் மனதுக்கு நெருக்கமான தொடர்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.  4BHK வில்லாவின் மதிப்பு ரூ.10.5 கோடி முதல் 13 கோடி வரை இருக்கும். இது அலிபாக் அவாஸ் பகுதியில் அமைந்துள்ளது.






 


நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆதித்யா கிலாசந்த் கூறுகையில், 'நவீன மற்றும் கிளாசிக் அலங்காரங்களின் நுட்பமான கலவையை, அதன் நடுநிலை கட்டமைப்புகள், கலைப்பொருட்கள் மற்றும் custom made  ஒளி சாதனங்கள் மூலம் அமைதியான உணர்வைத் தூண்டும் ஏராளமான தாவர வகைகள் கூடிய ஒரு நுட்பமான கலவையை விராட் விரும்புகிறார்," என குறிப்பிட்டார். வில்லாவில் நான்கு படுக்கையறைகள், இரண்டு மூடப்பட்ட கார் கேரேஜ்கள், powder rooms கொண்ட நான்கு குளியலறைகள், ஒரு மொட்டை மாடி, வெளிப்புற உணவகம், நீச்சல் குளம், மேலும் திறந்தவெளி இடம் நிறைய உள்ளது. வில்லாவின் பராமரிப்பை அவாஸ் வெல்னஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும், அதற்கான கிரியேட்டிவ் இயக்குநராக சுசான் பணியாற்றுகிறார். இந்த வில்லாவில் ஒரு ‘advanced air filtration system’ பொருத்தப்பட்டுள்ளது.


அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் அலிபாக்கில் மொத்தம் ரூ.19.24 கோடிக்கு இரண்டு சொத்துக்களை வாங்கியதாக செப்டம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது. மும்பை ஜூஹூவில் விராட் மற்றும் அனுஷ்கா மாதம் ரூ.2.76 லட்சத்திற்கு ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்துள்ளனர் என்பது முன்னதாக தெரியவந்தது. பிளாட் கடல் அருகில் கடற்கரையை பார்த்தவாரு மற்றும் ஹை டைட் கட்டிடத்தின் நான்காவது மாடியில் அமைந்துள்ளது. விராட் 1,650 சதுர அடிக்கு 7.50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது.


அனுஷ்கா மற்றும் விராட் 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். 2021ல் அவர்களுக்கு வாமிகாவை என்ற பெயர் சூட்டப்பட்ட பெண் குழந்தை பிறந்தது.