உலகப்புகழ் பெற்ற பத்திரிகை TIME. பத்திரிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிடும். இதற்காக கருத்துக்கணிப்பு ஆண்டுதோறும் நடைபெறும். வாசகர்கள் அதில் தகுதியான நபர்களுக்கு வாக்களிப்பர். அவர்களின் வாக்கு எண்ணிக்கை கணக்குகளின் படி பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் செல்வாக்கு மிக்க நபர்கள் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.


முதலிடத்தில் ஷாருக்கான்:


இதில் மேலும் ஒரு ஹைலைட் என்னவென்றால் ஆஸ்கர் விருது பெற்ற மிச்செல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்றவர்களை விட அதிகமான வாக்குகள் எண்ணிக்கை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. 1.2 மில்லியனுக்கும் அதிகமாக 4% அதிக வாக்குகளை பெற்று முன்னேறியுள்ளார். 


 



 


அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றியவர்கள் :


நடிகர் ஷாருக்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தை பிடித்தார்  ஈரானிய பெண்களின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய ஒரு பெண். அவரை தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் 2% வாக்குகளை வாசகர்களிடம் இருந்து பெற்று மூன்றாவது இடத்தை பெற்றனர். சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் ஆகியோர் சுமார் 1.9% வாக்குகளைப் பெற்று 4வது இடத்தைப் பிடித்தனர். கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 1.8% வாக்குகளுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷாருக் பிஸி ஷெட்யூல் :


நடிகர் ஷாருக்கான் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை உலகளவில் பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்த ஷாருக் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் 'பதான்'. தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து ஷாருக் நடித்த இப்படம் ஸ்மாஷ் ஹிட் அடித்தது. அடுத்ததாக இயக்குனர் அட்லீயின், ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடனும், ராஜ்குமார் ஹிரானியின் டுங்கி படத்திலும் நடிக்கிறார். இந்த ஆண்டு இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாக உள்ளது.