மாமன்னன்(Maamannan) திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தேவர் மகன் படத்தைக் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்(Mari Selvaraj) பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மாரி செல்வராஜ் பேசியதை எதிர்த்தும் ஆதரித்தும்  பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.


மாரி செல்வராஜ் பேசியதில் எந்தத் தவறும் இல்லை எனவும் தேவர் மகன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சாதியத் திரைப்படம் எனவும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் சிலர்.


மாரி செல்வராஜ் மீது விமர்சனம்


அதே நேரத்தில் மறுபக்கம் மாரி செல்வராஜை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பரியனுக்கு அப்பாவாக நடித்த தங்கராஜை,  மாரி செல்வராஜ் அடித்ததாக அவர் கூறும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு மாரி செல்வராஜை விமர்சித்து வருகிறார்கள் குறிப்பிட்ட சிலர். தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளார் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்


ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த இரண்டு வீடியோக்கள்


தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார் மாறன்.


முதல் வீடியோ


முதல் வீடியோவில் நடிகர் உதயநிதி மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் கோபமடைந்து தனது உதவி இயக்குநர்களை அடித்ததாக விளையாட்டாக கூறுகிறார்.






இரண்டாவது வீடியோ


இரண்டாவது வீடியோவில் இயக்குநர் மாரி செல்வராஜ்,  ஒருவன் தன் மனைவியிடமோ அல்லது தனது உதவி இயக்குநர்களிடமோ ஆதிக்கம் செலுத்துகிறான் என்றால் அது சாதிய மனப்பான்மைதான் என்று கூறுகிறார். திருப்பி ஒருவன் நம்மை அடிக்க மாட்டான் என்பது தெரிந்தபோது நாம் ஒருவனிடம் செலுத்தும் அதிகாரம் தான் சாதி என்று குறிப்பிடுகிறார் மாரி செல்வராஜ்






ப்ளூ சட்டை மாறனின் கேள்வி என்ன?


 இந்த இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் என்ன கேள்வியை முன்வைக்கிறார் என்பது இணையதளத்தில் விவாதப்பொருளாகி உள்ளது.