ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடித்துவரும் திரைப்படம் துணிவு. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.


அதேபோல, விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் இப்படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 






படத்தின் ப்ரொமோஷன் விழாக்களில் பொதுவாக விஜய் கலந்துகொள்வார். ஆனால், அஜித் கலந்துகொள்வதில்லை. படத்திற்கான ஒப்பந்தத்தின் போதே ப்ரொமோஷன்களுக்கு வரமாட்டேன் என்று அஜித் தரப்பு கூறிவிடுவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த முறை துணிவு படத்திற்கான ப்ரொமோஷன்களில் அஜித் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. இதனை மறுக்கும் விதமாக, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ஒரு நல்ல படம் தனக்கான விளம்பரத்தை அதுவே தேடிக்கொள்ளும் என்று பதிவிட்டிருந்தார். வழக்கம் போலவே பட புரொமோஷனுக்கு அஜித் வரமாட்டார் என்பதை சுரேஷ் சந்திராவின் பதிவு சூசகமாக வெளிப்படுத்தியது.


துணிவு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதும், படப்பிடிப்பு முடிந்த பின்னும் அஜித் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றிய புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலானது. ஒருவரின் பைக்கிற்கு அஜித் பஞ்சர் ஒட்டியது,  நடிகை மஞ்சுவாரியருடன் லடாக்கிற்கு போன வீடியோக்களும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், துணிவு படத்தின் டப்பிங் பணிகளில் அஜித் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் ப்ளூசட்டை மாறன் “ஒரு படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக்கொள்வது சரியா?






இதேபோல படத்தின் ப்ரமோ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமே. படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள்,  மகிழ்வார்களே.” என்று கூறியுள்ளார்.


இந்த பதிவுக்கு ப்ளூசட்டை மாறனை அஜித் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இதெல்லாம் அஜித் மேல இருக்க பாசத்துல யாரோ அவருக்கே தெரியாம எடுத்து ரிலீஸ் பண்றது. இது எப்பிடி அவருக்கான ப்ரோமோஷனாகும்.   இத்தனை ஆண்டுகளாக இதுபோன்று படங்களை வெளியிட்டு தான் அஜித் அவர் படங்களை ஓடவைத்தாரா என்று மற்றொரு ரசிகர் கேள்வியெழுப்பியுள்ளார்.