தமிழ் திரையுலகில் சமீபகாலமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறத் தவறிவிட்டது. கதை, திரைக்கதை என பல காரணங்கள் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்பட்டாலும், திரைவிமர்சகர்கள் பலரும் யூ டியூப்பில் மிக கடுமையாக விமர்சிப்பதே இந்த தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
கடுப்பாகிய வடிவேலு:
இந்த சூழலில், தமிழ் திரையுலகின் உச்ச காமெடி நடிகராக உலா வரும் வடிவேலு இதுதொடர்பாக பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் 10 பேர் ஒட்டுமொத்த சினிமாவையே அழித்து வருகின்றனர். சில யூடியூபர்களை போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் செய்ய வேண்டும் என்று பேசினார்.
சீண்டிய ப்ளூசட்டை:
வடிவேலுவின் இந்த கருத்துக்கு திரை விமர்சகர்கள் பலரது மத்தியிலும் கடும் கண்டனம் குவிந்தது. இந்த நிலையில், வடிவேலுவின் கருத்தை கண்டித்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
கேங்கர்ஸ்ல காமடி பண்ணாலும் ஓடல. மாரீசன்ல சீரியஸா நடிச்சாலும் ஓடல. எல்லாத்துக்கும் காரணம் யூட்யூபர்ஸ்தான். அவங்கள மேல ஏவுகணை தாக்குதல் நடத்தி அழிச்சிட்டா.. அப்பறம் மொக்கை படங்கள் ஹிட் ஆகிடும். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்று பதிவிட்டுள்ளார்.
எல்லை மீறும் விமர்சனம்:
சமீபகாலமாக ப்ளூசட்டை மாறன் உள்ளிட்ட பல திரை விமர்சகர்களும் சில குறிப்பிட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். படத்தை காட்டிலும் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அதிகரித்து வருகிறது.
தமிழ் திரையுலகின் காமெடியின் உச்சத்தில் நடிகர் வடிவேலு கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு என முன்னணி நடிகர்கள் முதல் வளரும் நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்து அசத்தியவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீணடும் நடிக்க வந்த பிறகு அவரால் காமெடியில் கோலோச்ச முடியவில்லை.
சறுக்கும் வடிவேலு:
மாமன்னன் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தியதால் தொடர்ந்து அவருக்கு குணச்சித்திர கதாபாத்திரங்கள் குவிந்து வருகிறது. ஆனால், மாமன்னன் போல மற்ற படங்கள் வெற்றியை குவிக்க முடியவில்லை. காமெடியிலும் அவருக்கு படங்கள் வந்தாலும் அவரால் காமெடியில் முன்பை போல கோலாேச்ச முடியவில்லை.
சமீபத்தில் அவர் நடித்த கேங்கர்ஸ் படத்தில் கேங்கர்ஸ் சிறப்பாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. மாரீசன் படம் பலரால் பாராட்டப்பட்டாலும் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இதையே ப்ளூசட்டை மாறன் வடிவேலுவை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.