பிளாக்ஷீப் நிறுவனத்தின் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள கன்னி ராசி என்ற வெப் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிவி சேனல்கள், தியேட்டர்களுக்கு நிகராக ஓடிடி தளங்கள் சமீப காலமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிய மக்களுக்கு இத்தகைய ஓடிடி தளங்கள் பெரும் பொழுதுபோக்காக அமைந்தது. இதன் வரவேற்பை பார்த்த திரையுலகினர் ஓடிடி தளங்களுக்கென படங்களையும், வெப் தொடர்களையும் இயக்கி வருகின்றனர். இருக்கின்ற இடத்திலேயே உலகின் பல மொழிகளைச் சேர்ந்த படைப்புகள் கிடைப்பதால் ஓடிடி தளங்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் பிளாக்ஷீப் நிறுவனம் தனது ஓடிடி தளமான BS Value செயலிக்கென பிரத்யேகமாக வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது BS Value செயலியில் “கன்னி ராசி” என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இதனை கோலமாவு கோகிலா மற்றும் ஓ மணப்பெண்ணே புகழ் அன்புதாசன் இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸில் ஸ்வேதா, ஷாமினி, பதின் குமார், புனிதா மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அபிஷேக் ஆகியோருடன் ஃபன் பண்றோம் புகழ் சேட்டை ஷெரிஃப் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஃபேண்டஸி கதை:
கிருஷ்ணா என்ற ஒரு வேலையில்லாத பையன், வேலைக்காகவும், நல்ல வாழ்க்கையைப் பெறவும் கடினமாகப் போராடிக்கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவன் நினைக்கும் ஒரு நபரை தற்செயலாக சந்திக்கிறான். இப்போது கிருஷ்ணாவுக்கு அந்த நபரின் உதவியால் ஒரு வேலை கிடைக்கிறது. அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது.! அது அந்த நபரின் சக்தி காரணமா அல்லது தற்செயலானதா என்பது கிருஷ்ணாவுக்கு தெரியாது, ஆனால் அவர் அந்த நபரை நம்பத் தொடங்குகிறார்..அவருடனான உறவு எப்படி கிருஷ்ணாவின் வாழ்க்கையில் திருப்பங்களை உருவாக்குகிறது மற்றும் அந்த நபர் யார் என்பதே இந்த வெப் தொடரின் கதையாகும். இந்த வெப் தொடர் மொத்தம் 3.30 மணிநேரம் கொண்ட 10 எபிசோட்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.