ப்ளாக் பேந்தர்: வகாண்டா பார் எவர்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அமெரிக்க நடிகர் சேட்விக் பாஸ்மேனின் ஹீரோவாக நடித்த திரைப்படம் ப்ளாக் பேந்தர். இத்திரைப்படத்தின் இன்னொரு பாகமான ப்ளாக் பேந்தர்-வகாண்டா ஃபாரெவர் படத்தின் ட்ரைலர் வெளியான சில மனிநேரங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்தது. மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ப்ளாக் பேந்தர் திரைப்படத்தில் சாட்விக் ப்ளாக் பேந்தராக கலக்கியிருந்தார். கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் போல சூப்பர் ஹீரோ திரைப்படமான இது, மார்வெல் ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, கருப்பின மக்களிடையே மாபெரும் ஆதரவு பெற்ற படங்களில் ப்ளாக் பேந்தர் திரைப்படம் முதல் வரிசையில் உள்ளதாக கூறப்படுகிறது. மார்வல் ஹீரோக்களில் முக்கியமான ஹீரோவாகவும் ப்ளாக் பாந்தர் கருத்தப்படுவதால், இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நம்பர் 1 இடத்தை பிடித்த வகாண்டா ஃபார்எவர்:
கடந்த சனிக்கிழமை அன்று வெளியான Black Panther: Wakanda Forever திரைப்படத்தினை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே, மார்வல் படங்ளுக்கென்று உலகளவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக இந்தியாவில், மார்வல் ரசிகர் என்று மார் தட்டிக்கொள்ளும் அளவிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இதனால், தற்போது திரைக்கு வந்துள்ள வகாண்டா ஃபார்எவர் திரைப்படமும், இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. கடந்த வார இறுதியில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே 15.48 கோடி வசூல் செய்தது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, வகாண்டா ஃபார்எவர் திரைப்படம் 50 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்துள்ளது. அது மட்டுமன்றி, 180 மில்லியனிற்கும் மேல் உலகளவில் இப்படம் வசூல் செய்துள்ளது. இதனால், மார்வல் ரசிகர்கள் இன்பத்தில் திளைத்துள்ளனர்.
ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்ததா?
இதுவரை ப்ளாக் பேந்தர் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்த சாட்விக் புற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இது மார்வல் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவர் இல்லாத இடத்தை, வகாண்டா ஃபார்எவரில் யார் பூர்த்தி செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி பேந்தர் ரசிகர்களிடையே நெடுநாட்களாக இருந்து வந்தது. இதனால், இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பும் எகிறி வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பளாக் பேந்தர் திரைப்படம், சாட்விக் ரசிகர்களுக்கு ஆறுதலை தறுவது போல நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.