அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்து 'குட் பேட் அக்லி'. ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் கேங்ஸ்டர் ரோலில் நடித்து தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். விடாமுயற்சி படம் கொடுத்த எதிர்மறை விமர்சனத்தைத் தொடர்ந்து, அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வெளியாகியிருந்தது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'குட் பேட் அக்லி' வெளியான முதல் நாளே நல்ல விமர்சனம் கிடைக்கவே படத்தை கொண்டாட துவங்கினர் ரசிகர்கள்.
அஜித்தை எப்படி திரையில் பார்க்க ஆசைப்பட்டார்களோ அதே போன்று அஜித்தை அணுஅணுவாக ரசித்து இயக்கி இருந்தார் இயக்குநர் ஆதிக். இந்தப் படம் வெளியாகி 20 நாட்களை கடக்க உள்ள நிலையில், இந்த படம் இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகளவில் ரூ.282 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 3 வாரங்களாக திரையரங்குகளை அஜித்தின் குட் பேட் அக்லி ஆக்கிரமித்த நிலையில், இந்த வாரம் ரெட்ரோ, மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் வெளியாக உள்ளதால்... பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இந்த படம் நீக்க பட உள்ளது. மேலும் அஜித்தின் பிறந்தநாளான (மே 1) ஆம் தேதி அன்று, அஜித்தின் புதிய பட அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.