இந்திய அரசியலில் திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் நுழைந்து அசத்தியுள்ளனர். முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மத்திய அமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ. என பல பதவிகளை வகித்துள்ளனர். அந்த வரிசையில் மோடி தலைமையிலான அரசியல் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் ஸ்மிருதி ராணி.

Continues below advertisement

அடிப்படையில் இவர் ஒரு நடிகை ஆவார். இந்தியில் ஒளிபரப்பாகிய கியாங்கி சாஸ் பீ கபி பாகு தீ என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலிலும் வெற்றி பெற்று அமைச்சரானார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, மீண்டும் சீரியலுக்கே திரும்பியுள்ளார். 

இந்தி சீரியலில் பில்கேட்ஸ்:

அவர் தற்போது தன்னை பிரபலப்படுத்திய அதே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்த சீரியலில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், சாஃப்ட்வேர் துறையின் ஜாம்பவனுமாகிய பில்கேட்ஸ் நடித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்த காட்சியின் ப்ரமோ எனப்படும் முன்னோட்டம் நேற்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த ப்ரமோவில் ஸ்மிருதி ராணி ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று கூறுகிறார். பதிலுக்கு பில்கேட்ஸ் நமஸ்தே துளசி ஜி.. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று கூறுகிறார். அதன்பின்பு, அவரிடம் ஸ்மிருதி ராணி இந்தியில் ஏதோ கூற, நன்றி துளசி ஜி என்று பில்கேட்சும் கூறுகிறார். தற்போது இந்த ப்ரமோ இணையத்தில் பிரபலமாகி வருகிறது. 

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உலகின் முக்கியமான நிறுவனமாக மாற்றியதில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. ஏனென்றால், அவரது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பில்கேட்சும் இந்தியாவிற்கு சில முறை வருகை தந்துள்ளார். 

பில்கேட்ஸ் இந்த சீரியலில் ஒரு காட்சியில் நடித்திருப்பதன் மூலமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் எகிறியுள்ளது. இந்த சீரியல் மூலமாக தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீண்டும் ஏற்றிக்கொள்ள ஸ்மிருதி ராணி முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் இந்த சீரியலில் தற்போது நடித்து வருகிறார். 

இதன்மூலம் அடுத்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு பெற்று வெற்றி பெற ஸ்மிருதி ராணி ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான பணிகளையும் அவர் ஒரு பக்கம் தீவிரமாக செய்து வருகிறார். இந்த சீரியல் பெண்களை குறிவைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த சீரியலின் தலைப்பின் அர்த்தம் மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளே என்பதே ஆகும். 

அரசியல் களம்:

கடந்த ஜுலை மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்மிருதி ராணி காங்கிரஸ் கோலோச்சிய அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். இதனாலே இவர் மீது தனி கவனம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. 1998ம் ஆண்டு முதல் நடித்து வரும் ஸ்மிருதி ராணி 2003ம் ஆண்டு முதல் பாஜக-வில் இருந்து வருகிறார். அக்கட்சியின் மகாராஷ்ட்ரா பாஜக மாநில இளைஞரணித் துணைத்தலைவர், பாஜக தேசிய செயலாளர், பாஜக மகளிரணித் தலைவர் பொறுப்புகளை வகித்தவர் 2011ம் ஆண்டு ராஜ்ய சபா எம்பியாக பொறுப்பு வகித்தார்.

 

பின்னர், ராகுல்காந்திக்கு எதிராக 2014ம் ஆண்டு அமேதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆனார். ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சிறுபான்மைத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். கடந்த தேர்தலில் அமேதியில் தோல்வி அடைந்தார்.