பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   


பிரபல மாடலான காயத்ரி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படம் மூலமாக திரையுலத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் நடித்த அவர் தொடர்ந்து ஜீ தமிழில் வெளியான சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.


 






இந்த நிலையில் அவர் தற்போது தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.     






காயத்ரி பதிவிட்டுள்ள தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “கடைசிவரை நீயும் நானும் கைகோர்த்து” என்று பதிவிட்டதோடு தனது கணவரின் புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.