Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்

Biggboss Tamil Season 8 LIVE: ஸ்மார்ட்டான விஜய் சேதுபதி.. கொண்டாட்டமாக தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. லைவ் அப்டேட்ஸ் இங்கே..

தாக்‌ஷா Last Updated: 06 Oct 2024 08:38 PM
Jeffry Gana Singer : கானா பாடகர் ஜெஃப்ரியை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

Jeffry Gana Singer : கானா பாடகர் ஜெஃப்ரியை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

டான்ஸர், காமெடியன், சுனிதா கோகாயை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

டான்ஸர், காமெடியன், சுனிதாவை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி





பங்கேற்பாளராக ஆர்.ஜே ஆனந்தியை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

தொகுப்பாளர், நடிகர் தீபக் திங்கரை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

தீபக் திங்கரை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி





முன்னாள் பிக்பாஸ் பங்கேற்பாளர் NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

முன்னாள் பிக்பாஸ் பங்கேற்பாளர் NSK ரம்யாவின் கணவர் சத்யாவை பங்கேற்பாளராக அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

3-ஆம் பங்கேற்பாளராக தர்ஷா குப்தாவை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி

3-ஆம் பங்கேற்பாளராக தர்ஷா குப்தாவை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி





இரண்டாம் பங்கேற்பாளராக, மகாராஜா மகள் சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி.

இரண்டாம் பங்கேற்பாளராக சச்சனா நமிதாஸை அறிமுகப்படுத்தினார் விஜய் சேதுபதி. இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது





Biggboss Tamil season 8 LIVE : முதல் பங்கேற்பாளராக நுழைந்த ரவீந்தர் சந்திரசேகரன்

Biggboss Tamil season 8 LIVE : Ravindar Chandrasekaran - first contestant : முதல் பங்கேற்பாளராக நுழைந்த ரவீந்தர் சந்திரசேகரன்






பிக்பாஸ் சீசன் 8 ஷோவில் முதலாம் பங்கேற்பாளராக நுழைந்தார் ரவீந்தர் சந்திரசேகரன். தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தன்னுடைய யூ ட்யூப் சேனலில் தினமும் விமர்சித்து நிகழ்ச்சிகளை பதிவிட்டுள்ளார். சொந்த வாழ்வில், டிவி நடிகர் மகாலஷ்மியை திருமணம் செய்த நிலையில், அதிகம் பேசப்பட்டார்.

Biggboss Tamil season 8 LIVE : மாஸாக நுழைந்த விஜய் சேதுபதி

 


Biggboss Tamil season 8 LIVE : மாஸாக நுழைந்த விஜய் சேதுபதி


7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனை எப்படி விஜய் சேதுபதி ஈடுகட்டுவார் என்னும் கேள்விகள் எழுந்தன. அவர் வரும்போதே மாஸாக அவருடைய ஸ்டைலில் ஷோவுக்கு வந்து மக்களை உற்சாகப்படுத்தினார்

Background

தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே இருந்தாலும் ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். விஜய் சேதுபதி ஆஃப் ஒயிட் கோட் சூட்டுடன் மிளிர்கிறார்


7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில், 8வது சீசனாக பிக்பாஸ் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான அத்தனை சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், நடப்பு சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் வித்தியாசமான நிகழ்ச்சித் தொகுப்பில் இந்த பிக்பாஸ் சீசன் 8 எப்படி இருக்கப்போகிறது? என்பதே ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.


சூடுபிடிக்குமா ஆட்டம்? போட்டியாளர்கள் யார்? யார்?


பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ரஞ்சித், ஐஸ்வர்யா, தீபக், தர்ஷா குப்தா, சச்னா, சுனிதா. ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா, சௌந்ர்யா நஞ்சுண்டன், டி.எஸ்.கே. பால் டப்பா அனீஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் உள்ளே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் ஏராளமான சர்ச்சைகளுடனும், குழப்பத்துடனும் அரங்கேறியது. ஏராளமான மோதல், சலசலப்புகள் இருந்ததும், பல குழப்பமான தீர்ப்புகளும் கடந்த சீசனில் பல ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இந்த சீசனை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு புதுப்புது போட்டிகள், காரசார விவாதங்கள், டாஸ்க்குகளுடன் ஆட்டத்தை நகர்த்த பிக்பாஸ் முடிவு செய்துள்ளது.


அசத்துவாரா விஜய் சேதுபதி?


இந்த முறை போட்டியாளர்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது விஜய் சேதுபதியே ஆவார். அவர் நடிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் இதுவரை பெரியளவில் அசத்தவில்லை. அவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரியளவு வெற்றியை பெறவில்லை. இதனால், அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இந்த முறை வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளராக களமிறங்கியிருப்பதால், கமல்ஹாசன் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.