பிக்பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் மற்றும் வியானா இடையில் நடந்த ஆணல் பறக்கும் விவாதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக கானா வினோதிடம் வியானா பேசிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கானா வினோத் தனது கையை காயப்படுத்தியதாக வியானா குற்றம்சாட்டுகிறார். ஆனால் இந்த காட்சிகள் பிக்பாஸ் 24 மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங்கில் இடம்பெற வில்லை என்பது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 , 59ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த சீசனில் முதல் முறையாக கடந்த வாரம் எவிக்ஷன் தவிர்க்கப்பட்டது. மற்றவர்களை விட குறைந்த வாக்குகளைப் பெற்று எவிக்ட் ஆகவிருந்த வியானா காப்பாற்றப்பட்டார் . மேலும் 21 ஆவள் வெளியே சென்ற ஆதிரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனால் எஃப் ஜே வைத்து ஆதிரை மற்றும் வியானா இடையில் மோதல் ஏற்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதனிடையில் கானா வினொத் தன்னை காயப்படுத்தியதாக வியானா அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
எங்களுக்கும் அடிக்க தெரியும்
கானா வினொத்திடம் பேசிய வியானா " எனக்கு காயம்பட்டிருக்கிறது. நீங்கதான் பெரிய ஆள்னு நினைச்சு எல்லார் மேலயும் கை வச்சிட்டு இருந்தா எதிரில் இருப்பவர்கள் திருப்பி தட்டிவிட்டால் உங்களுக்கு அசிங்கமாகிடும். இந்த ஷோக்கு மரியாதை கொடுத்துதான் எல்லாரும் அமைதியாக இருக்காங்க. எல்லாராலயும் கைவைக்க முடியும். பொண்ணுங்களாலயும் கைவைக்க முடியும் . யாராலயும் ஒன்னும் பண்ண முடியாதுனு நினைக்காதீங்க.உங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்க ஒழுங்கா பண்ணுங்க. நீங்க ஸ்கோர் பண்ண நினைக்காதீங்க." என்று கானா வினொத்திற்கு முகத்திற்கு நேராக பேசிய விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எஃப் ஜே யுடன் இல்லாத போது வியானா இவ்வளவு தெளிவா இருக்காரே அவரை பாராட்டி வருகிறார்கள். இப்போது ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் வினோத் வியானா கையைப் பிடித்த காட்சி பிக்பாஸ் 24 மணி நேர லைவில் ஏன் இடம்பெறவில்லை என்பதுதான்
45 நிமிடம் கட் ஆன லைவ்
இந்த நிகழ்விற்கு முன்னாள் பிக்பாஸ் 24 மணி நேர லைவ் ஸ்டீரிமிங் 45 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்டதாகவும் இந்த இடைவெளியில் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பானதாகவும் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்கள். இந்த 45 நிமிடம் என்ன நடந்தது. கானா வினோத் மற்றும் வியானா விடையில் எப்படி பிரச்சனை காயப்படுத்துவது வரை போனது என்பது மர்மமாகவே உள்ளது. இது குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சி தரப்பில் விளக்கமளிக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.