பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் முத்துக்குமரன் தீபாவளியை முன்னிட்டு வழக்கம்போல புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விடியோவைத் தொடர்ந்து முத்துக்குமரன் மீது பாலியல் குற்றம்சாட்டிய வகிதா அக்தர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
முத்துக்குமரன் லேட்டஸ்ட் வீடியோ
தீபாவளியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் அவர் " தீபாவளி அதுவுமா வாழை இலையை விரித்தாலே நாட்டுக்கோழி குழம்பு , எலும்பு சூப் , உப்புக்கறி , மூலக்கறி , மூட்ட , நண்டு , மீன் என்று சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இப்போ நமக்கு நேரம் சரியில்லாததால் எல்லா துண்பங்களும் விலகி மன நிம்மதியை குடுப்பா முருகா என்று விரதத்தில் இருக்கோம். இந்த தீபாவளிக்கு நமக்கு இட்லி சாம்பார் தான். உங்களுக்கு இந்த நல்ல நாளில் எல்லா கெட்டதும் விலகி நல்லதே நடக்கும் என்று நான் வேண்டிக்கிறேன். " என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
வகிதா அக்தர் ரியாக்ஷன்
முத்துக்குமரனின் இந்த வீடியோவைத் தொடர்ந்து வகிதா அக்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் செல்ஃபோன் ஸ்கிரீனை பார்த்து காரி துப்பியுள்ளார். முத்துக்குமரனின் வீடியோவுக்கு பதிலடியாக வகிதா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக பலரும் சமுக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்
முத்துக்குமரன் வகிதா சர்ச்சை பின்னணி
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீதான வஹிதா அக்தரின் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா, முத்துக்குமரன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருக்கமாகப் பழகியதாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்து தன்னை ஏமாற்றியதாகவும் வீடியோ வெளியிட்டார். மேலும், இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, வஹிதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த முத்துக்குமரன், இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், காதல் உறவு எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்தார். வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டவை என்றும், அவை தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனால் இருவருக்கும் இடையிலான விவகாரம் சமூக வலைதள விவாதமாக மாறியுள்ளது.
