BiggBossUltimate க்குள் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஜூலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் ஜூலி பேசியதற்கு, தற்போது நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BiggBossUltimate நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் 24-7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோ வெளியிடப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக் பாஸ் தமிழ் சீசனை ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்கிறது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார். இதை ரசிகர்கள் மேடையில் பிரத்யேகமாக பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BiggBossUltimate க்குள் முதல் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் 1 சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த பாடலாசிரியர் சினேகன் அறிமுகப்படுத்தப்பட்டார். இவரைத்தொடர்ந்து, ஜூலி அறிமுகப்படுத்தப்பட்டார். இவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வீடியோவில், அந்த வீடியோவில், ஜூலி செல்போனில் ஹலோ சொல்கிறார். எதிர்முனையில் ஒருவர், ‘ஜூலி மேடம் ஒரு குறும்படம் கதை இருக்கு நடிக்கிறீங்களா? எனக் கேட்கிறார். அதற்கு ஜூலி, ‘அது என்னையா குறும்படம், உன் வாயில் ஷார்ட்ஃபிலிம் எல்லாம் வராதா..? எனக் கேட்கிறார். பின்னர், அவார்ட் நிகழ்ச்சிக்கு போகனும் என ஜூலி டிரைவரிடம் பேச, அதற்கு அவர், வயிற்று வலி வரலை என்று சொல்ல, சைடில் சின்ன வீடியோவில் முதல் சீசனில் ஜூலி வயிற்று வலி எனக்கூறுவது வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன், தற்போது ஜூலியை கிண்டல் செய்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பாக ஜூலி இப்படி எல்லாம் பேசக்கூடாது என்றும், ஓவர் கான்ஃபீடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.