(Source: Poll of Polls)
Bigg Boss Aurora Sinclair : 21 வயதில் மாடலிங்...7 லட்சம் ஃபாலோவர்ஸ்...யார் இந்த அரோரா சின்க்ளேர்
Bigg Boss 9 Tamil Contestant Aurora Sinclair : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ள அரோரா சின்க்ளேர்

பிக்பாஸ் 9 தமிழ்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளராக பங்கேற்றுள்ளார் இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா சின்க்ளேர். யார் இந்த அரோரா சின்க்ளேர் இவரைப் பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம்.
யார் இந்த அரோரா சின்க்ளேர்
புதுச்சேரியை சொந்த ஊராக கொண்ட அரோரா சேலத்தில் பள்ளி படிப்பை முடித்தார். தாவரவியலில் பட்டப்பட்டிப்பை முடித்தப் பின் சென்னைக்கு வேலைக்காக வந்த அரோரா அந்த வேலையில் வந்த சம்பளம் பற்றாத காரணத்தினால் மாடலிங் கரியருக்குள் நுழைந்தார். பாரம்பரிய உடையில் மாடலிங் செய்வதற்கு ஏற்ற உடலமைப்பு இல்லாததால் கிளாமரை நோக்கி நகர்ந்தார். தனது 21 வயதில் மாடலிங் துறைக்கு வந்தவர் அரோரா. இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டுவந்தார். தற்போது இவருக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். மாடலிங் தவிர்த்து ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். அரோரா ஒரு மாதத்திற்கு ரூ 26 லட்சம் வரை சம்பாதிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின.
சர்ச்சைகள்
இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக புகைப்படங்களை வெளியிடுவது குறித்து அரோரா மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் அங்கீகரிக்கப்படாத டேட்டிங் ஆப்களை விளம்பரப் படுத்தியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.





















