பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கும் சூழலில் வாராவாரம் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்ற பட்டு வரும் நிலையில் இதுவரையில் அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில் உடல்நல குறைவு காரணமாக பவா செல்லதுரை வெளியேற சக போட்டியாளர்கள் உயர்த்திய குற்றச்சாட்டு காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டார் பிரதீப் ஆண்டனி.
மக்கள் ஆதரவு :
பிரதீப் ஆண்டனி வெளியேற்றம் குறித்து இணையத்தில் அவரின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். சோசியல் மீடியா எங்கும் பிரதீபுக்கு ஆதரவாக கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில் ஒரு சில விமர்சனங்கள் கமலுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டு வந்தது.
பிரதீப் கோரிக்கை :
இப்படிப்பட்ட நிலையில் பிரதீபிற்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுமா? என கேள்விகள் எழுந்து வந்தன. அந்த வகையில் நவம்பர் 10ம் தேதி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார் பிரதீப். மீண்டும் அவரை பிக் பாஸ் வீட்டுக்குள் சில நிபந்தனைகளுடன் அனுப்புமாறு கோரிக்கை வைப்பது போல பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பலர் அவரின் இந்த பதிவிற்கு ஆதரவும் தெரிவித்தார்கள்.
வெளியான ப்ரோமோ :
அதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய பிக் பாஸ் எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் "தீர விசாரித்ததனாலே வந்த தீர்வு. இது தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா என்ற கேள்விக்கு அவர்களின் நடத்தை பதில் சொல்லும். விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்" என தெரிவித்து இருந்தார்.
ஆட்டம் முடிந்தது :
இதை அடுத்து மீண்டும் பிரதீப் ஆண்டனி மேலும் ஒரு பதிவு ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "கேம் ஓவர்... இரண்டு கை கால் இல்லைனா கூட பொழைச்சுப்பான் சார். கெட்ட பையன் சார் அவன். வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன் நல்லா இருங்க" என ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார்.
மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுப்பார் பிரதீப் ஆண்டனி என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய எமாற்றமாக அமைந்தது.
ஆனால் நிச்சயம் பிரதீப்பை சதி செய்து வீட்டை விட்டு வெளியேற்றியவர்களுக்கு சரியான ஒரு தீர்ப்பு கிடைக்கும் என பதிவிட்டு வருகிறார்கள் பிக் பாஸ் தீவிர ரசிகர்கள்.