லைனாக கண்டெஸ்டெண்ட்ஸ் எண்ட்ரி கொடுக்க, பிக்பாஸ் கவின் வந்து ஒரு அதிரடி பெர்ஃபாமன்ஸை போட்டதுடன், லிஃப்ட் ட்ரெயிலரையும் பிக்பாஸ் மேடையிலேயே அரங்கேற்றினார்.


முன்னதாக, Who's the hero, who's the hero பாட்டோடு பட்டையைக் கிளப்பி எண்ட்ரி கொடுத்தார் ப்ரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில தூள் கிளப்பிய ப்ரியங்கா வந்திருப்பதால், நிறைய பேச்சுக்கும், அவரின் ப்ராண்ட் மார்க்கான கலகலப்புக்கும் பஞ்சமே இருக்காதுன்னு தெரியுது. வாங்க பாஸ் வாங்க மோடில் ரசிகர்கள் குஷியானார்கள். 


நமிதா மாரிமுத்து ஜெயிக்காத திருநர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என அழகான ஸ்டேட்மெண்ட்டோடு உள்ளே வந்திருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நமிதா, கேமராவில் தன் சமூகம் சார்பாக தான் வந்திருப்பதில் பெருமை என பெருமிதம் தெரிவித்தார். அறிமுக வீடியோவில் அவ்வளவு அழகாக இருந்த நமிதா, அழகற்ற, பல கசடுள்ள சமூகத்தில் பிரச்சனைகளையும் சொன்னார். 


"அன்னப்பறவை மாதிரி இருக்கப்போறேன்..” ”ட்ரோல்லேயே ட்யூன் ஆனவன்..” என வந்தவுடன் பஞ்ச்களைப் போட்டுத்தள்ளினார் சினிமா பையன் அபிஷேக் ராஜா. பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும், சிக்கன் இருக்கு, சிப்ஸ் இருக்கு என்கிறார் ராஜு. சிப்ஸ் போதுமே என்கிறார் அபிஷேக் ராஜா. முன்னதாக அறிமுகமானவர், ஜெர்மனியில் இருந்து வந்த மாடல் மதுமிதா. தற்போது மென்பொறியாளராக பணிபுரிகிறார். அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனம். உள்ளே வந்தபின்பும் அது அப்படியே இருக்குமா என ஆடியன்ஸ் சொல்லட்டும். உள்ளே வந்தவுடன், இசையிடமும், ராஜுவுக்கும் ஜெர்மனி தமிழில் டஃப் கொடுக்கிறார் மிமிக்ரி சென்ஸ் இருக்குனு தெரியும், காமன்சென்ஸ் இருக்கான்னு பாப்போம் என பாக்யராஜை இமிடேட் செய்து கமல்ஹாசனை அசத்திய ராஜுமோகன் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ராஜுவின் Introductory வீடியோ கலக்கியது. சீரியல் நடிகையும், மாடலுமான தாரிணியும், நாட்டுப்புற இசைப்பாடகரான சின்னப்பொண்ணும் களமிறங்கியிருக்கிறார். தாரிணி ஆசைப்பட்ட மணவாழ்க்கையில், இடி இறங்கியதாக சொல்கிறார். அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கணவரின் இழப்பை தாண்டி வந்திருப்பதாக சொல்கிறார். ஒரு இசைக்கச்சேரி கன்ஃபார்ம் என்பது கண்டெஸ்டண்டுகளைப் பார்த்தாலே க்ளியராகிறது. வேல்முருகன் போன பிக்பாஸில் பெரிய அபிமானத்தை அள்ளினார்.


அட்றா அட்றா நாக்கமுக்கா என அசத்தலாக எண்ட்ரி கொடுத்தார் சின்னப்பொண்ணு. நாட்டுப்புறக் கலைஞர்களை நோக்கிய உதாசீனம் மாறவேண்டும் என்கிறார் சின்னப்பொண்ணு. முன்னதாக, ஜெமினி கணேசன் - சாவித்ரி இணையரின் பேரன் அபிநயை, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். இவருக்கு நான் மாமன் முறை என்றார் கமல். விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்வதில் பெருமைப்படுவதாக சொன்னார் அபிநய்.