விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Luxury Budget குறித்த அறிவிப்பு. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் நாணயங்கள் ஐந்து பெட்டிகளில் வைக்கப்படும். எந்த நாணயங்களையும் எடுத்துவிட்டு, பிக்பாஸுக்கு அறிவிக்கவேண்டும். யாராவது பிடிபட்டுவிட்டால், அவர்கள் எடுத்த இடத்தில் வைக்கவேண்டும். பிடிபட்டவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்றார். டாஸ்க் நடக்கும்போது பிக்பாஸ் மாற்றங்களையும் அறிவிக்கலாம் என்றார். ஐய்க்கி பெரி ஒரு நாணயத்தை எடுக்க இமான் உதவி செய்தார். பாவனியும் ஐய்க்கிக்கு காவலிருந்தார்.


ப்ரியங்கா, சின்னப்பொண்ணுவின் உதவியுடன் அபிஷேக் ஒரு நாணயத்தை எடுத்துவிட்டார். இன்னொரு நாணயத்தை மதுமிதா எடுக்க, இன்னொன்றை வருண் எடுத்துவிட்டார். மற்றொன்றை பாவனி எடுத்துவிட்டார். ஐய்க்கி ஒளித்துவைத்த நாணயத்தை அக்‌ஷரா லவட்டிவிட்டார். மதுமிதாவிடம் இருந்து ப்ரியங்கா வாங்கி தன் துணிகளுக்குள் பதுக்கிக்கொண்டார். ப்ரியங்கா அபிஷேக்குக்கு ஒரு நாணயம் தருவதாகவும், இன்னொன்று கிடைத்தான் தாமரைக்கு தருவதாகவும் பேசிக்கொண்டிருந்தார். பாவனி தான் மறைத்து வைத்திருந்த நாணயத்தை பத்திரப்படுத்த எடுக்கும்போது அபினய் வந்தார். காவல் காக்க வந்த அபினயிடம், “யாருகிட்டயும் சொல்லாத” என்றார் பாவனி. உன்னை செருப்பால அடிப்பேன் என ஆங்கிலத்தில் சொன்னார் அபினய். சொன்ன உடனே லூஸு என்றார் பாவனி.


அக்‌ஷராவைக் காப்பாத்துடா என அபிஷேக் சொல்ல, வருண் முடியாதுடா என்றார். நிரூப் பாவனியின் நாணயங்களை எடுப்பதைப் பார்த்த அபினய் கத்தியதால் நிரூப் பாதாள சிறைக்கு போய்விட்டார். பாவனி இன்னொரு நாணயத்தை எடுத்து சுருதியிடம் தந்ததை ராஜு பார்த்துவிட்டேன் என சொல்லியும், பாவனியும், சுருதியும் ஒப்புக்கொள்ளாமல் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். நாணயங்கள் யாருக்குத்தான் சொந்தமாகும் என இனிதான் தெரியும்.


அதே கோவத்தில் இருந்தாரோ என்னவோ, “வருணைப் பத்தி தப்பு தப்பா பேசுனான்.. மூஞ்சிமேலயே சொல்றேன்.. பின்னாடி பேசி எனக்குப் பழக்கமில்ல” என ஜெமினி கணேசன் பேரன் அபினயைப் பற்றி வருணிடம் போட்டுக்கொடுத்து பாவனி அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினார். ரூமை விட்டு வெளியில் வந்து பேசி தெளிவாகலாமா என கேட்ட அபினயிடம், பேசத் தேவையேயில்ல என கதையை முடித்தார் பாவனி.