சீரியல் நடிகையும், மாடலுமான தாரிணியும், நாட்டுப்புற இசைப்பாடகரான சின்னப்பொண்ணும் களமிறங்கியிருக்கிறார். தாரிணி ஆசைப்பட்ட மணவாழ்க்கையில், இடி இறங்கியதாக சொல்கிறார். அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கணவரின் இழப்பை தாண்டி வந்திருப்பதாக சொல்கிறார். ஒரு இசைக்கச்சேரி கன்ஃபார்ம் என்பது கண்டெஸ்டண்டுகளைப் பார்த்தாலே க்ளியராகிறது. வேல்முருகன் போன பிக்பாஸில் பெரிய அபிமானத்தை அள்ளினார்









அட்றா அட்றா நாக்கமுக்கா என அசத்தலாக எண்ட்ரி கொடுத்தார் சின்னப்பொண்ணு. நாட்டுப்புறக் கலைஞர்களை நோக்கிய உதாசீனம் மாறவேண்டும் என்கிறார் சின்னப்பொண்ணு. முன்னதாக, ஜெமினி கணேசன் - சாவித்ரி இணையரின் பேரன் அபிநயை, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். இவருக்கு நான் மாமன் முறை என்றார் கமல். விவசாயம் சார்ந்த வேலைகளைச் செய்வதில் பெருமைப்படுவதாக சொன்னார் அபிநய்.