Bigg Boss Tamil: சிரிப்புக்கு கேரண்டி.. வாட்டர்மெலன் ஸ்டாருக்கும் கானா வினோத்துக்கும் சண்டை - பிக்பாஸ் வீட்டில் கலகல!
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கும், கானா வினோத்திற்கும் பிக்பாஸ் வீட்டில் நடக்கம் சண்டைகள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஆகும். இந்த ரியாலிட்டி ஷோவின் 9வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, கானா வினோத், எஃப்ஃஜே உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
திவாகர் - கானா வினோத்:
இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்துள்ள போட்டியாளராக வாட்டர்மெலன்ஸ்டார் திவாகர் மாறியுள்ளார். இந்த சீசனில் உள்ளே நுழைந்தபோது அவரது இன்ஸ்டா வீடியோக்கள், யூ டியூப் பேட்டிகள் உள்ளிட்டவை காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்புகள் இருந்தது.
#Diwakar & #GanaVinoth Combo 😂🔥 Loved it ..#BiggBossTamil9 #BiggBossTamilSeason9 pic.twitter.com/QXBl9DJSRS
— ♡︎𝐀𝐧𝐝𝐫𝐮 (@AndruDarlz) October 14, 2025
பிக்பாஸ் வீட்டில் அவர் அனைவரிடமும் நடந்து கொண்ட விதமும், மற்றவர்கள் அவரை நடத்திய விதமும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் - கானா வினோத் கூட்டணி அனைவராலும் ரசித்துப் பார்க்கப்படுகிறது.
கலகலப்பான சண்டை:
திவாகர் எதற்கெடுத்தாலும் வினோத் வினோத் என்று பெயரை மாற்றிக் கூறிவிடுவதும், வினோத் - திவாகர் சண்டையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ப்ரவீனுடன் சண்டையிட்டு வந்த திவாகரிடம் ப்ரவீன் ஏதோ சொல்ல உள்ளே வந்தபோது, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வினோத் என்று பெயரை மாற்றிக் கூறவும், கானா வினோத் ஆவேசப்பட்டார்.
அவர் உடனடியாக எதுக்கெடுத்தாலும் வினோத் வினோத் என்று கூறுகிறாய்... தர்பீஸ் அவ்ளோதான் என்று கூறினார். திவாகர் அதற்கு விளக்கம் கொடுத்தார். ஆனாலும், வினோத் எலிமினேஷன் ரவுண்டில் வினோத் என்று பெயரை மாற்றிக் கூறிவிட்டால் என்ன செய்வது? என்று திவாகரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், வினோத் என்ற பெயரை தலையில் இருந்து அழித்துவிடு என்று கூறினார்.
#Diwakar & #ganavinoth 😂🤣
— 𝕀мρєяƒє¢т 𝕏 (@tis_Imperfect) October 13, 2025
Stress Buster Combo 😄😂#BiggBossTamil9 #BiggBossTamilSeason9 #BiggBoss pic.twitter.com/7W5TOA5aHU
வைரலாகும் வீடியோ:
பின்னர், இரவு தூங்கும் முன்பு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு கானா வினோத் கை ரேகையை வைத்து ராசிபார்த்தார். பின்னர், குறட்டை விடுவது தொடர்பாக திவாகரிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.
🤣 #GanaVinoth & 🍉 - Part 3 😭😭
— Monster 😈 (@monsterr_mk) October 13, 2025
Midnight Josiyam 😊#Diwakar 😭😭🔥#BiggBossTamil9 #WatermelonStar #BiggBossTamil pic.twitter.com/mSjcfwfKeG
இந்த வாரம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் கூட்டணியாக இவர்கள் கூட்டணி மாறியுள்ளது.





















