Bigg Boss 9 Tamil LIVE: பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ்! 20 போட்டியாளர்களின் முழு விவரம்!
Bigg Boss 9 Tamil LIVE: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
Advertisement
ABP NADULast Updated: 05 Oct 2025 10:39 PM
Background
Bigg Boss Tamil Season 9 Grand Launch LIVE Updates: : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.பிக் பாஸ் சீசன் 9:தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்...More
Bigg Boss Tamil Season 9 Grand Launch LIVE Updates: : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.பிக் பாஸ் சீசன் 9:தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டு நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் வெளியாகும் நிகழ்ச்சி,’பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு டாஸ்க்குகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி 100 நாட்கள் வரை பிக் பாஸ் இல்லத்தில் தங்கியிருப்பவர் தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.இந்த நிகழ்ச்சியை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த முறை புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கங்களும் இடம் பெற்றுள்ளது. போட்டியாளர்கள் யார்?திவாகர்அரோரா சின்க்ளேர்எப்.ஜேபார்வதிதுசார்கனிசபரிபிரவீன் காந்திகெமிஆதிரைரம்யா ஜோவினோத்வியானாபிரவீன்சுபிக்ஷாஅப்சராCJநந்தினிவிக்ரம்கமருதீன்கலையரசன்
Bigg Boss 9 Tamil LIVE: மொக்கை வாங்கிய வாட்டர் மெலன் திவாகர்! எப்படி?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வாட்டர் மெலன் திவாகர் இயக்குனர் பிரவீன் காந்தியிடம் தன்னை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்க அதற்கு பிரவீன் காந்தியோ...”குட் குட் குட்”என்ற சொன்னபடி அவர் சொல்வதை கேட்காமல் நகர்ந்து செல்கிறார்.
Bigg Boss 9 Tamil LIVE: ஹா ஹா ஹாசினி.. 13 வது போட்டியாளர் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 9-ல் 13 வது போட்டியாளராக மாடல் வியானா களம் இறங்கியிருக்கிறார். இப்போதே இவர் கியூட்டாக பேசுகிறார் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டனர்.
Bigg Boss 9 Tamil LIVE: யாரும் எதிர்பார்க்காத சம்பவம்.. மாஸ் எண்ட்ரி கொடுத்த ரம்யா ஜோ!
நடனக் கலைஞரான ரம்யா ஜோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11 வது போட்டியாளரக பங்கேற்றுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவருக்கு நிச்சயம் ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss 9 Tamil LIVE: முதல் நாளிலே வந்த பெரிய பிரச்சனை! என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 10 போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தியுள்ளார். இப்போது பிக் பாஸ் வீட்டில் கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்று போட்டியாளர்கள் புகார் கொடுத்து வருகின்றனர். முதல் நாளே இப்படி ஒரு பிரச்சனையா!
Bigg Boss 9 Tamil LIVE: உள்ளே வந்த ஒன்பதாவது போட்டியாளர்.. யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது போட்டியாளராக கெமி என்ற மாடல் உள்ளே வந்திருக்கிறார். இவர் தேசிய அளவில் விளையாடிய கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் தகவல்.
Bigg Boss 9 Tamil LIVE: ஜோடி படத்தின் இயக்குனர்.. 8 வது போட்டியாளர் யார்?
கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ரட்சகன் படம், 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரவீன் காந்தி பிக் பாஸ் சீசன் வீட்டின் 8 வது போட்டியாளராக வந்திருக்கிறார். விடாமல் பேசி கொண்டிருக்கும் இவர் இந்த சீசனில் ரசிகர்களை என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.
Bigg Boss 9 Tamil LIVE: ரசிகர்களை கடுப்பேற்றும் திவாகர்!
பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக உள்ளே வந்த டாக்டர் திவாகர் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். நடிக்கிறேன் என்ற பெயரில் இவர் செய்யும் வேலைகளை பார்க்க வேண்டுமே என்று கடுகடுக்கின்றனர்.
Bigg Boss 9 Tamil LIVE: 6 வது போட்டியாளர் யார் தெரியுமா? ரொம்ப பிரபலம் இவங்க!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி டைட்டில் வின்னார் கனி 6 வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதனால் இந்த பிக் பாஸ் போட்டியில் இவர் எப்படி விளையாட போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
Bigg Boss 9 Tamil LIVE: ஆட்டம் பாட்டத்துடன் உள்ளே வந்த நம்ம புதுக்கோட்டை பையன் துஷார்!
கொரியன் ஸ்டார் என்ற பெயரில் பிக் பாஸ் உள்ளே வந்திருக்கும் துஷார் புதுக்கோட்டை பையனாம். இவர் நிகழ்ச்சியின் முதல் நாளே டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 5 வது போட்டியாளராக உள்ளே வந்தார்.
Bigg Boss 9 Tamil LIVE: முதல் நாளே வேலையை காட்டிய திவாகர்!
பிக் பாஸ் சீசன் 9-ல் முதல் நாளே பலூன் அக்கா என்று அழைக்கப்படும் அரோராவிடம் வாட்டர் மெலன் ஸ்டார் வேலையை காட்டியுள்ளார். அதாவது, அரோராவை பார்த்து ‘உங்க கண் அழாகா இருக்கு’ என்று சொல்ல உடனே அருகில் இருந்த FJ ’இவங்களுக்கு உங்க பேத்தி வயசு’ என்று கூறி தக் லைப் கொடுத்து விட்டார்.
Bigg Boss 9 Tamil LIVE: கலக்கலாக எண்ட்ரி கொடுத்த VJ பார்வது! அமர்க்களம்!
பிக் பாஸ் சீசன் 9-ல் 4 வது நபராக மாஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜே பார்வது. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss Tamil Season 9 LIVE: செம்ம ஹாட் மச்சி... பிக் பாஸ் வீட்டில் பலூன் அக்கா!
சமூக வலைதளங்களில் இளசுகளை கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டவர் அரோரா. பலூன் அக்கா என்று ரசிகர்கள் அழைக்கப்படும் இவர் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் வந்திருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
Bigg Boss Tamil Season 9 LIVE: முதல் போட்டியாளராக உள்ளே வந்த நடிப்பு அரக்கன்!
இன்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வந்திருக்கிறார். நடிப்பு அரக்கன் என்று சமூக வலைதளங்களில் பிரபலமானவர் இவர்.