ஜெர்மனியில் இருந்து வந்த மாடல் மதுமிதா. தற்போது மென்பொறியாளராக பணிபுரிகிறார். அறிமுக வீடியோவில், அவ்வளவு அப்பாவித்தனம். உள்ளே வந்தபின்பும் அது அப்படியே இருக்குமா என ஆடியன்ஸ் சொல்லட்டும். உள்ளே வந்தவுடன், இசையிடமும், ராஜுவுக்கும் ஜெர்மனி தமிழில் டஃப் கொடுக்கிறார்
மிமிக்ரி சென்ஸ் இருக்குனு தெரியும், காமன்சென்ஸ் இருக்கான்னு பாப்போம் என பாக்யராஜை இமிடேட் செய்து கமல்ஹாசனை அசத்திய ராஜுமோகன் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ராஜுவின் Introductory வீடியோ கலக்கியது. ராஜு பிக்பாஸ் கவினின் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்பது கூடுதல் தகவல். "விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே சினிமாதான் தெரியும். சினிமா எடுக்கணும்னா, என்னவெல்லாம் வேணும் தெரியுறப்போ பிரமிப்பா இருந்துச்சு. அதுக்கப்புறம் நடிப்பு இருந்து தள்ளிப்போய், கதையில கவனம் செலுத்துனேன். அதுக்கப்புறம்தான் எனக்கு நடிப்பு நல்ல வந்துச்சுன்னு நினைக்கிறேன். வாய்ப்பை மதிக்கணும். வாய்ப்புக்கு நியாயம் பண்ணனும்னு நினைக்கிறேன். என்னைத்தாண்டி ட்ரோல் என் குடும்பத்தைத் தொடக்கூடாது. அதுல கவனமா இருக்கணும்னு நினைக்கிறேன்” - நான் நிறைய பாத்துட்டேன், அதனால அதைவிடவும் மோசமா எதுவும் நடந்துடாதுன்னு நான் நம்புறேன்னு நீட்டாக முடித்தார்.
முன்னதாக, இசைவாணியின் அறிமுக வீடியோவே கலக்கியது. துறைமுகப்பகுதியில் பிறந்தவராக தன்னை அறிமுகப்படுத்தியவர் சொல்லியது, முயற்சி செய்பவர்கள் எல்லோரும் கடந்த அதே முட்களின் ரணம். ”நான் ரொம்ப நல்லா பாடுவேன். ஆனா எல்லா இடத்துலயும் பாடவிடமாட்டாங்க. கடைசியா தான் மைக் கிடைக்கும். இப்போ Casteless Collective-இல் தொடங்கி வளர்ந்திருக்கேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இசைவாணி, இந்த மேடையை மிகச் சரியாக பயன்படுத்தப்போவதாக சொல்லியிருக்கிறார். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்கள் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் கன்ஃபெஷன் அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவேதான் பிங் நிறத்தால் ஆன படுக்கை ஒன்றும் நாற்காலி ஒன்றும் உள்ளது. அது போட்டியாளர்களில் சிறந்த அந்தஸ்து பெறுபவர்களுக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.