பிக்பாஸ் சீசன் 7:


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பைனலுக்கு இன்னும் சில வாரங்களே எஞ்சி உள்ளதால், போட்டியாளர்கள் இடையே போட்டி கடுமையாகி உள்ளது. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்ததில் கூல் சுரேஷ், அனன்யா ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் வெறும் 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படும். அப்படி ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் டாஸ்க் என்றால், அது Freeze Task தான். இந்த டாஸ்க்கின்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்பத்தினரை பார்க்கும்போது போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க அவர்கள் ஆரத்தழுவி வரவேற்பது காண்போரை கண்கலங்க செய்யும்.


வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த முறை வித்தியாசமாக  Freeze Task நடைபெறுகிறது. அதாவது, ஒரே நேரத்தில் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வீட்டிற்கு செல்கின்றனர். இது சம்பந்தமான வீடியோக்களுக்கு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


கெட்ட வார்த்தை பேசிய விக்ரம் தந்தை:






இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் விக்ரம் தந்தை கெட்ட வார்த்தை பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில், ”யாரு நல்லா கேம் விளையாடுறாங்க"? என்று தன்னுடைய தந்தையிடம் விக்ரம் கேட்கிறார். அதற்கு விக்ரமுடைய தந்தை, "அனைத்து டாஸ்கையும் நல்ல விளையாடி இருந்தாய். ஒரு "......” கூட ஆடல. நீ கவலைப்படாம ஆடு" என்று சொல்லி இருந்தார். பின்னர், இந்த கெட்ட வார்த்தை பேசியதற்காக கேமராவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் விக்ரம் தந்தை. 






தொடர்ந்து பேசிய விக்ரமின் பெற்றோர், "நீ அமைதியா இருக்க.  அது தான் உன்னோட குறையா இருக்கு. அதுக்கு உங்கள கோபித்து சண்டை போட சொல்லல. எல்லா விஷயத்தையும் தைரியமா பேசுங்க.  சண்டை போட வேண்டாம். தெளிவாக பேச வேண்டும்.  அமைதியா இருக்காதீங்க. ஜாலியா இரு..எதற்கு பயப்படுற? எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காத" என்று அட்வைஸ் கொடுத்திருக்கின்றனர். இது சம்பந்தமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: 'இங்க இப்படியெல்லாம் பேசாதீங்க' லெப்ட், ரைட் வாங்கிய அர்ச்சனா பெற்றோர்.. திணறிய நிக்சன்!