பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இன்று நல்லவராக தெரிபவர்கள் நாளை வேறு மாதிரி தெரிகிறார்கள். கூட்டணி சேர்வது என்பது பிக்பாஸ் வீட்டுக்குள் சகஜம் என்றாலும் அந்த கூட்டணி மாறிக்கொண்டே இருக்கும். இன்று இணைந்து பிணைந்து இருப்பவர்கள் ஒரு சில நாட்களிலேயே அடித்து கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. 


நிகழ்ச்சி துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில் கன்டென்ட்டை வாரி குவித்து பாயிண்ட் பாயிண்டாக பேசிய ஜோவிகாவை பார்த்து சக போட்டியாளர்கள்  அவரிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள். ஆனால் சமீபகாலமாக ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் தூங்குவதும், பெரிய அளவில் வெளியில் தெரியாமலும் அமைதியாக இருந்து வருகிறார். 



ஜோவிகாவின் இந்த அமைதி குறித்து அவரின் அம்மா வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் பேசுகையில் "தான் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் எனக்கு ஏதோ நடந்துள்ளது என்பதை கணித்ததால்தான் ஜோவிகா சில தினங்களாக அமைதியாக இருந்து வருகிறாள் என்றும், அவள் இப்போது வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டால் கூட பரவாயில்லை. அவளுக்கு சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது" என்றும் பேசி இருந்தார் வனிதா. 


மணியின் பப்பெட் பொம்மையாகவே இருந்து வந்த ரவீனாவின் உண்மையான முகம் சில நாட்களாக கொஞ்சம்கொஞ்சமாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. ரவீனா மற்றவர்களை பின்னால் இருந்து ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ரவீனாவின் நடவடிக்கையும் அதற்கு ஏற்றார்போல்தான் இருக்கிறது.


இன்று வெளியான பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் ஜோவிகா கதறி அழுகிறார். "என் வீட்டுக்கு போறேன். நான் எங்க அம்மாவோடைய இருக்கேன். சும்மா கேங் கேங் என சொல்லி கடுப்பேத்திக்கிட்டே இருக்காங்க. கேங் கேங்னு சொல்றாங்க.. நிஜமாவே நெஸ்ட் என்னதான் சொல்றாங்க. எனக்கு தேவையா இது? நான் ரவீனா கிட்ட போய் சொன்னா மறுபடியும் கேங் கேங்னு கடுப்பேத்தற மாதிரியே சொல்லிக்கிட்டு இருந்தா" என அனன்யாவிடம் கதறுகிறார் ஜோவிகா. 



"நான் உங்களை சொல்லல" என ரவீனா சொல்லியும் "உங்க எமோஷன் அப்படி இருந்தா என்னோட எமோஷன் இப்படி தான் இருக்கும் ரவீனா" என ஜோவிகா சொல்ல "நீங்க அப்படி நினைச்சுக்கிட்டு இருந்தா என்னால எதுவும் பண்ண முடியாது" என ரவீனா சொல்லவும் கையெடுத்து கும்பிட்டு "ஒகே மா தாயே" என சொல்கிறார் ஜோவிகா. 


ஏனோ ஆரம்பத்தில் ஜோவிகாவிடம் இருந்த அந்த கெத்து இப்போது சுத்தமாக இல்லை என்றும், தைரியமாக ஒரு விஷயத்தை கையாளக்கூடிய ஜோவிகாவா இப்போது இப்படி அழுது கொண்டு இருப்பது என குழப்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.